Saturday 19 March 2016

நடுநிலைபள்ளிகளில் பட்டதாரி ஆசிரியர் முன்னுரிமை நிர்ணயம் செய்வது எப்படி ?

பட்டதாரி ஆசிரியர் முன்னுரிமை நிர்ணயம் செய்வது எப்படி ?
    
ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளிகளில் பணி புரியும் பட்டதாரி ஆசிரியர்கள் பதவி உயர்வு மற்றும் நேரடி நியமனம்  மூலம் நியமனம் செய்யப்படுகிறார்கள்.
  
பொதுவாக ஊராட்சி ஒன்றிய பள்ளிகளில் முன்னுரிமை நிர்ணயம் செய்ய பணியில்  சேர்ந்த   தேதி மற்றும் தகுதிகாண்பருவம் அடிப்படை யில்  நிர்ணயம் செய்யப்படும்.

ஆனால்  சில ஒன்றியங்களில்  தேர்வு வாரியம் மூலமாக நியமனம் பெற்றவர்களுக்கு தகுதி காண்பருவம் பற்றி எடுத்து கொள்ளாமல் நியமன தேதியை மட்டும் எடுத்துக்கொண்டு தகுதிகாண்பருவம் முடித்த பதவி உயர்வு ஆசிரியர் களுக்கு  முன்னாள் வைத்து நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது - இது தவறு.

தொடக்க கல்வி  இயக்குனர்  செயல் முறைகள்  ந. க. எண் 36679/டி 3/2008,  நாள்18. 11. 2008 ன்படி

01.06.2006 அன்று முதல்  பணியில்  சேர்ந்ததாகக் கொண்டும் தகுதிகாண் பருவத்தையும் கணக்கில்  கொள்ள வேண்டும் என கூறப்பட்டுள்ளது.
    
தேர்வாணைய ஆசிரியர்களுக்கு  நியமன தேதி  அடிப்படையில் மட்டும்  முன்னுரிமை  நிர்ணயம்  பள்ளிக்கல்வித்துறையில் மட்டுமே. தொடக்க கல்வி துறைக்கு அல்ல.
     
தகவல் அறியும் உரிமை  மூலமும் தகவல்  பெறப்பட்டுள்ளது.