Monday 24 July 2017

பாஸ்போர்ட் பெற...

பாஸ்போர்ட் பெற இனி பிறப்பு சான்றிதழ் அவசியமில்லை

கடந்த வாரம் பார்லி.,யில் பாஸ்போர்ட் விண்ணப்ப முறை தொடர்பான கேள்வி

எழுப்பப்பட்டது. இதற்கு பதிலளித்த மத்திய அரசு, பாஸ்போர்ட் விண்ணப்பிக்கும் முறை எளிமையாக்கப்பட உள்ளது என பதிலளித்துள்ளது.
மத்திய அமைச்சர் வி.கே.சிங் அளித்துள்ள பதிலில், பாஸ்போர்ட் பெறுவதற்கு இனி பிறப்பு சான்றிதழ் அவசியமில்லை. ஆதார் அல்லது பான் கார்டை சமர்ப்பித்தாலே போதும். அதுவே பிறப்பு சான்றிதழாக எடுத்துக் கொள்ளப்படும். தத்தெடுக்கப்பட்ட குழந்தைகள், அவர்களை பராமரித்த காப்பகத்திடம் இருந்து பிறந்த தேதி தொடர்பான ஆவணத்தை பெற்று அளிக்கலாம்.
புதிய பாஸ்போர்டில் தனிநபர் விபரங்கள் ஆங்கிலம் மற்றும் இந்தியில் அச்சிடப்பட்டிருக்கும். 60 வயதிற்கு மேல் மற்றும் 8 வயதிற்கு கீழுள்ள அனைத்து பாஸ்போர்ட் விண்ணப்பதாரர்களுக்கும் பாஸ்போர்ட் கட்டணத்தில் இருந்து 10 சதவீதம் சலுகை அளிக்கப்படும். ஆன் லைனில் விண்ணப்பம் செய்வோர் பெற்றோரில் தந்தை அல்லது தாய் யாராவது ஒருவரின் பெயரை மட்டும் குறிப்பிட்டால் போதும்.
இணைப்பு படிவத்தின் எண்ணிக்கையும் 15 லிருந்த 9 ஆக குறைக்கப்பட உள்ளது. அது சுய ஒப்பம் இருந்தாலே போதுமானது. ஒப்புகை கையெழுத்து பெற வேண்டிய அவசியமில்லை. திருமணம் ஆனோர் திருமண சான்றிதழ் சமர்ப்பிக்கவோ, அவர்கள் விவாகரத்து பெற்றிருந்தால் அவர்களின் கணவர் அல்லது மனைவியின் பெயரையோ குறிப்பிடவோ தேவையில்லை என தெரிவித்துள்ளார்

Thursday 13 July 2017

வீட்டிலிருந்தபடியே IT ரிட்டன் தாக்கல்

வீட்டில் இருந்தபடியே "வருமான வரி ரிட்டன்" - வருமானவரித்துறை புதிய ஆப்ஸ் அறிமுகம்.
வருமானவரி செலுத்துபவர்கள் வீட்டில் இருந்தபடியே, யாருடைய துணையும் இன்றி ரிட்டன் தாக்கல் செய்ய வசதியாக “ஆயக்கர் சேது” என்ற செயலியை(ஆப்ஸ்) வருமான வரித்துறை அறிமுகம் செய்துள்ளது.

மத்திய நிதி அமைச்சர் அருண்ஜெட்லி இந்த செயலியை நேற்று முறைப்படி அறிமுகம் செய்துவைத்தார். இந்த “ ஆயக்கர் சேது” செயலி முதல்கட்டமாக ஆன்ட்ராய்ட் ஸ்மார்ட்போன்களில் செயல்படுமாறு  உருவாக்கப்பட்டுள்ளது.

இதை பயன்படுத்துபவர்கள் இதில் தங்களி்ன் பான்கார்டு எண்் ஆதார் கார்டு எண் ஆகியவற்றை பதிவு செய்ய வேண்டும். மேலும், 7306525252  என்ற எண்ணுக்கு மிஸ்டுகால் செய்து ஆப்ஸை பதிவிறக்கம் செய்யலாம்

இது குறித்து மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி நிருபர்களிடம் கூறியதாவது “ மத்திய நேரடி வரிகள் வாரியம்  எடுத்துள்ள இந்த செயலி முயற்சி மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது.

வருமானவரி செலுத்துபவர்களுக்கு மிகவும் உதவியாக இருக்கும். வெளிநபர்களின் உதவி இல்லாமலேயே வீட்டில் இருந்தபடியே, வருமானவரி ரிட்டனை தாக்கல் செய்துவிட முடியும்.

வருமானவரி செலுத்துபவர்களும், அதிகாரிகளும் நேரடியாக சந்தித்து கொள்ளும் சூழலை குறைக்கும். இருவரும் சந்திக்கும் போதுதான் தேவையில்லாத சிக்கல்கள் ஏற்படுகின்றன. அதை தவிர்க்கும். அதுமட்டுமல்லாமல், எதிர்காலத்தில் வருமானவரித்துறையின் தோற்றத்தை மக்கள் மத்தியில் உயர்த்திக்காண்பிக்கும் ” எனத் தெரிவித்தார்.

வருமானவரி செலுத்துபவர்கள் வருமானவரி செலுத்தும் காலமாக இப்போது இருப்பதால், இந்த செயலி அவர்களுக்கு மிகவும் உதவியாக இருக்கும். வரி செலுத்துதல், வரி ரீபண்ட் பெறுதல், குறைகளை தெரிவித்தல், பான்கார்டுக்கு விண்ணப்பித்தல் இந்த ஆப்ஸில் செய்ய முடியும்.

குறிப்பாக இந்த ஆப்ஸில் சாட்டிங் வசதி உள்ளது. காலை 10 மணி முதல் மாலை 6 மணிவரை பான்கார்டு, டி.டி.எஸ், டி.ஏ.என்., ரிட்டன் பைலிங், ரீபண்ட் நிலை,வரி செலுத்திய விவரம் குறித்து அதிகாரிகளிடம் கேட்டு தெரிந்து கொள்ளலாம்.

மேலும், வரி தொடர்பான வல்லுநர்கள் ஆகியோருடன் சாட்டிங் செய்து ஆலோசனைகள் பெறலாம், மேலும், அருகில் உள்ள வரி ரிட்டன் தயாரிப்பவர்களின் முகவரியையும் பெறலாம்.

மேலும் வருமான வரி செலுத்துபவர்கள் வரி செலுத்தும் தேதிகள், படிவங்கள், அறிவிக்கைகள் ஆகியவை குறித்து அவர்கள் ஐ.டி.டி. படிவத்தில் கொடுத்துள்ள செல்போன் எண்ணுக்கு அனுப்பப்படும், மேலும், எஸ்.எம்.எஸ். அலர்ட்டும் கொடுக்கப்படும்.

வருமானவரி செலுத்துபவர்கள் கூறிய புகார்களுக்கு எப்படி நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ள, துரிதமாக செயல்பட்டுவருவது குறித்த விவரங்களும் இந்த ஆப்ஸில் இருக்கும்.

Wednesday 12 July 2017

ஆதார் கார்டு தொலைந்தால் மீண்டும் பெறுவது எப்படி?

ஆதார் கார்டு தொலைந்தால் என்ன செய்ய வேண்டும்? #AadharOnline
ஆதார் கார்டு தவிர மற்ற எதை வாங்க வேண்டுமென்றாலும் அதற்கு ஆதார் தேவை என்றாகிவிட்டது. ஆம்புலன்ஸ் தொடங்கி அத்தனை அத்தியாவச தேவைகளுக்கும் ஆதார் எண் தேவை. அப்படியென்றால், ஆதார் கார்டு எப்போது நமக்குத் தேவைப்படும்
என்பதை சொல்லவே முடியாது. எந்த நேரமும் என்கையில் இருக்க வேண்டும். ஒருவேளை ஆதார் தொலைந்துப் போனால்? லைசென்ஸ், பாஸ்போர்ட்டுடன் ஒப்பிடும்போது டூப்ளிகேட் ஆதார் கார்டு வாங்குவது எளிமையான ஒன்று என்பதுதான் இதில்ஒரே ஆறுதலான விஷயம். ஆதார் எண் அல்லது பதிவு எண்(Enrollment number) ஆகியவைதான் முக்கியம். அதனால், இப்போதே உங்கள் ஆதார் கார்டில் இருக்கும் எண்ணை பத்திரமாக எங்கேயாவது குறித்து வைத்துக்கொள்ளவும். ஒரு வேளை ஆதார் எண் நினைவில் இல்லையென்றாலும் பரவாயில்லை. ஆதார் வாங்குவதற்காகக் கொடுத்த மொபைல் எண் மற்றும் மின்னஞ்சல் முகவரி தெரிந்தால் போதும். அவற்றை வைத்து ஆதார் எண்ணை மீட்டெடுக்கலாம். முதலில், ஆதார் இணையதளத்தை புக்மார்க் செய்துகொள்ளுங்கள். www.uidai.gov.in காணாமல் போன ஆதார் கார்டுக்குப் பதிலாக டூப்ளிகேட் பிரின்ட்எடுக்க நினைப்பவர்கள் “Retrieve Lost UID/EID” என்ற லிங்கினை க்ளிக் செய்யவும்.

அந்தப் பக்கத்தில் உங்களுக்குவேண்டியது ஆதார் எண்ணா அல்லது பதிவு எண்ணா என்பதைக் குறிப்பிட வேண்டும். பின் பெயர், மின்னஞ்சல் முகவரி, மொபைல் எண் ஆகியவற்றைக் குறிப்பிடவும். ஆதார் வாங்கும்போது கொடுக்கப்பட்ட மொபைல் எண்ணைத்தான் இங்கேயும் குறிப்பிட வேண்டும். அந்த மொபைல் எண்ணுக்கு வரும் OTPஐ அடுத்த பகுதியில் குறிப்பிட வேண்டும்.

பொதுவாகவே, ஆதார் எண் தொடர்பான பிராசஸில் OTP உடனே வருவதில்லை என்ற குற்றச்சாட்டு உண்டு. எனவே, 15 நிமிடங்கள் வரை பொறுமையாக இருக்கவும். அதன் பின்னும் OTP வரவில்லையென்றால் மட்டுமே மீண்டும் சப்மிட் கொடுக்கவும். OTP-யை சரிபார்க்கும் சிஸ்டம், அந்த எண் சரியாக இருந்தால் உங்கள் மின்னஞ்சல் முகவரி மற்றும் மொபைல் எண்ணுக்கு உங்கள் ஆதார் எண் அல்லது பதிவு எண்ணைஅனுப்பி வைக்கும். அந்த எண்ணை வைத்து பிரின்ட்எடுத்துக் கொள்ளலாம். பிரின்ட்எடுக்க:

மொபைல் எண்ணுக்கு ஆதார் எண்ணைஅனுப்பியிருப்பதாக வரும் செய்திக்கு கீழே, ஆதார் பிரின்ட்எடுக்க உதவும் லின்க் இருக்கும். ”Download Aadhaar" என்ற அந்தலிங்கை க்ளிக் செய்யவும்.

ஆதார் மீம்ஸ் பார்க்க அந்தப் பக்கத்தில் ஆதார் எண், பதிவு எண்(Enrollment number),முழுப் பெயர், பின் கோடு, மொபைல் எண் ஆகியவற்றை கொடுக்கவும். மீண்டும் ஒரு OTP மொபைல் எண்ணுக்கு அனுப்பப்படும். அதையும் என்டர் செய்தால், டவுன்லோடு லிங்க் கிடைக்கும். டவுன்லோடு ஆதார் கார்டு, பாஸ்வேர்டால் பாதுகாக்கப்பட்ட PDF formல் இருக்கும். உங்கள்பின்கோடுதான் அதன் பாஸ்வேர்டு. மொபைல் எண், மின்னஞ்சல் முகவரி ஆகியவைசிலருக்குத்தவறு என மெஸெஜ் கூடவரலாம். அவர்கள் ”Verify Email/ Mobile Number” என்ற லிங்கில் சென்று அவற்றை சரிப்பார்த்துக் கொள்ளலாம். ஆதார் கார்டு டூப்ளிகேட் என இதைச்சொன்னாலும், உண்மையில் அது டூப்ளிகேட் அல்ல. ஆதார் எண்தான் முக்கியம். அதை எத்தனை முறை பிரின்ட்எடுத்தாலும் அது ஒரிஜினல்தான்.

Sunday 9 July 2017

Online smart card apply செய்வது எப்படி?

HOW TO APPLY RATION "SMART CARD" ONLINE
"தமிழ்நாடு ஸ்மார்ட் குடும்ப அட்டைக்கு இணையதளம் மூலம் விண்ணப்பம் செய்வது எப்படி..?"

இந்தியாவில் மிகப் பெரிய பிரச்சனை அரசு அலுகலகங்கள் சென்று நமக்குத் தேவையான குடும்ப அட்டை, சாதிச் சான்றிதழ், வாக்காளர் அடையாள அட்டைப் போன்றவற்றைப் பெறுவது என்று கூறலாம்.  உங்களுக்கு இணையதளம் மூலமாகத் தமிழகத்தில் எப்படி எளிதாக வீட்டில் இருந்தபடியே குடும்ப அட்டைக்கு விண்ணப்பிப்பது என்று இஙு விளக்கமாக அளிக்கின்றது. இதனைப் படித்துப் பயன்பெறுங்கள்.

தமிழ்நாடு உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறையின் அதிகாரப்பூர்வ இணையதளமான www.tnpds.gov.in மூலமாக நீங்கள் எளிதாகக் குடும்ப அட்டைக்கு விண்ணப்பிக்கலாம். ஸ்மார்ட் ரேசன் கார்டுகள் பெறப் பதிவு செய்யலாம் என்று உங்களுக்குத் தெரியுமா.

2016-ம் ஆண்டுத் தீபாவளி முதல் தமிழக அரசு இணையதளம் மூலம் குடும்ப அட்டைக்கு விண்ணப்பிக்க www.tnpds.gov.in இணையளத்தை அறிமுகப்படுத்தியது. ஆனால் இந்த இணையதளம் மூலமாக எப்போதும் குடும்ப அட்டைக்கு விண்ணப்பிக்க முடியது. இணையதளம் மூலம் குறிப்பிட்ட கால அவகாசத்தில் மட்டுமே புதிய குடும்ப அட்டைக்கு விண்ணப்பிக்க முடியும். அது எப்போது என்று செய்திகள் மூலம் அறிந்து கொண்டு பதிவு செய்வது நல்லது.

படி 1 www.tnpds.gov.in என்ற இணையதளத்தில் உள்நுழைந்து புதிய அட்டைக்கு விண்ணப்பிக்க என்ற தெரிவை தேர்வு செய்யவேண்டும். பூர்த்திச் செய்யப்படக் கட்டாயமானவை * குறிக்கப்பட்ட அனைத்துப் புலங்களும் விண்ணப்பதாரரால் பூர்த்திச் செய்யப்படவேண்டியது கட்டாயமாகும். புதிய குடும்ப அட்டைக்காக விண்ணப்பிக்க, விண்ணப்பத்தில் உள்ள "இப்போது விண்ணப்பிக்க" பொத்தானை கிளிக் செய்யவும்.  

குடும்ப விவரங்கள் விண்ணப்பதாரரின் பெயர், தந்தை அல்லது கணவர் பெயர் மற்றும் முகவரி (கதவு எண், வீடு / அப்பார்ட்மெண்ட் பெயர் , தெரு பெயர் ) தமிழ் (அ ) ஆங்கிலத்தில் உள்ளிடவும். மாவட்டம், தாலுகா, கிராமம் ஆகியவற்றை அதனதன் பட்டியலிலிருந்து தேர்ந்தெடுக்கவும். உறுப்பினரை எப்படிச் சேர்பது குடும்பத் தலைவர் மற்றும் உறுப்பினர் விவரங்களைச் சேர்ப்பதற்கு, "உறுப்பினரைச் சேர்க்க" பொத்தானை அழுத்தவும் . .

முதலில் குடும்பத் தலைவரின் விவரங்களை உள்ளீடு செய்யவும். குடும்ப உறுப்பினர் ஒவ்வொருவருக்கும் பின்வரும் விவரங்களை உள்ளிடவும் பெயர் தமிழ் (அ ) ஆங்கிலத்தில் - கட்டாயம் பிறந்த தேதி - கட்டாயம் பாலினம் - கட்டாயம் தேசிய இனம் - கட்டாயம் உறவுமுறை - கட்டாயம் தொழில் - கட்டாயமற்றது மாத வருமானம் - கட்டாயம் வாக்காளர் அட்டை எண் - கட்டாயமற்றது ஆதார் எண் - கட்டாயம் குடும்ப அட்டை வகை குடும்ப அட்டை வகையைத் தேர்வு செய்யவும் பொருட்களில்லா அட்டை, அரிசி அட்டை , சர்க்கரை அட்டை, காவல்துறை அட்டை. குடியிருப்புச் சான்று குடியிருப்புச் சான்றை பதிவேற்ற, குடியிருப்புச் சான்று பிரிவில் உள்ள ப்ரவ்ஸ் பொத்தானை அழுத்தவும். பின் கணினியில் தகுந்த கோப்பை தேர்ந்தெடுத்து, பதிவேற்றுப் பொத்தானை அழுத்தவும் . குடியிருப்புச் சான்றுக்கான ஆவணத்தைத் தேர்வு செய்யவும் (மின்சாரக் கட்டணம், தொலைப்பேசி கட்டணம், வாக்காளர் அடையாள அட்டை, வங்கி கணக்குப் புத்தகத்தின் முன் பக்கம், சொந்த வீடு இருந்தால் அதன் சொத்து வரி, குடிசை மாற்று வாரியத்தின் ஒதுக்கீட்டு ஆணை, இதர.,).  

பதிவேற்றும் படிவங்கள் இருக்க வேண்டிய வடிவம் பதிவேற்றம் செய்யும் குடியிருப்புச் சான்று png, gif, jpeg வடிவத்தில் இருக்க வேண்டும் மற்றும் ஆவணத்தின் அளவு 2 மெகாபைட்ஸ் (MB) இருக்க வேண்டும். எரிவாயு இணைப்பு விவரங்கள் ஏற்கனவே எரிவாயு இணைப்புப் பெறப்பட்டிருந்தால், சரிகுறிப் பெட்டியைக் கிளிக் செய்யவும். எரிவாயு இணைப்பு பற்றிய கீழ்க்கண்ட விவரங்களை அளிக்கவும்: கீழே கொடுக்கப்பட்டுள்ள அனைத்து விபரங்களும் இணைப்பு 1 பிரிவில் பூர்த்திச் செய்வது கட்டாயமாகும்.

1. எரிவாயு இணைப்புக்குரிய நபரின் பெயரைத் தேர்வு செய்யவும்

2. எண்ணெய் நிறுவனத்தின் பெயரைத் தேர்வு செய்யவும்

3. எல்.பி.ஜி நுகர்வோர் எண்ணை உள்ளிடவும்

4. எரிவாயு நிறுவனத்தின் பெயரை உள்ளிடவும்

5. சிலிண்டர் எண்ணிக்கை தேர்வு செய்யவும்  

குறிப்பு: குடும்ப அட்டைக்காக விண்ணப்பிக்கும் நபரிடம் இரண்டு எரிவாயு இணைப்பு இருந்தால், அந்த விவரங்களை இணைப்பு 2 பிரிவில்; உள்ளிடவும். உள்ளிட்ட விவரங்களை ஒப்புக்கொள்ள, உறுதிப்படுத்தல் பகுதியில் உள்ள சரிகுறிப் பெட்டியைக் கிளிக் செய்யவும். விண்ணப்பத்தைச் சமர்ப்பித்தல் உள்ளிட்ட விவரங்களைச் சமர்ப்பிக்க, விண்ணப்பத்தில் உள்ள பதிவு செய் பொத்தானை கிளிக் செய்யவும். விண்ணப்பத்தைப் பதிவு செய்த பின்னர், உங்களுக்கு ஒரு குறிப்பு எண் அனுப்பப்படும்.

இந்த எண் உங்கள் விண்ணப்பத்தின் நிலையை அறியப் பயன்படுத்தப்படும் மேலும் எதிர்காலப் பயன்பாட்டிற்கும் உதவும்.   ஆதார் அட்டை இந்திய தனிப்பட்ட அடையாள அட்டை ஆணைய (UIDAI) இணையத்தளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்த ஆதாரை பொது விநியோகத் திட்ட (PDS) பயன்பாட்டில் பதிவேற்றம் செய்தால் அந்தக் கோப்பின் பெயர் ஆதார் அட்டையில் உள்ள முகவரியின் அஞ்சல் குறியீடாக இருக்க வேண்டும். விண்ணப்பத்தின் நிலையை எப்படிச் சரிபார்ப்பது இந்த இணைப்பை கிளிக் செய்வதன் மூலம் குடும்ப அட்டை விண்ணப்பத்தின் நிலையை உங்களுக்குக் கிடைத்த குறிப்பு எண்ணை உள்ளிட்ட சரி பார்க்கலாம்.