Monday 29 May 2017

Android mobile க்கு உரிய antivirus apps

தனிநபர் தகவல்கள் திருடப்படுவது என்பது இன்றைக்குக் கணினிகளை விட மொபைல்களில் அதிகமாக இருக்கிறது. எப்பொழுதும் இணைப்பில் இருக்கும் இணையம், ஓப்பன் சோர்ஸ், மால்வேர்கள் ஆகியவை தகவல்கள் திருடப்படும் வாய்ப்பை அதிகரிக்கின்றன. ப்ளே ஸ்டோரில் இருக்கும் அப்ளிகேஷன்கள் ஓரளவுக்கு நம்பத்தகுந்தவை. ஏனெனில், எதாவது மால்வேர் கொண்ட ஆப் இருந்தால் அதனால் பாதிக்கப்பட்டவர்கள் அது பற்றி ரிப்போர்ட் செய்துவிடுவார்கள். 

ஆன்டி வைரஸ் என்பது வைரஸ் நீக்குவதற்கு மட்டுமே பயன்படுகிறது என்பது பலரின் கருத்து. ஆனால் ஆன்டி வைரஸ் நமக்கு அதையும் தாண்டி பல வசதிகளை அளிக்கிறது. ஆப் லாக், கால் பிளாக்கிங், இன்டர்ட் பாதுகாப்பு என இதில் வசதிகள் அதிகம். சிறந்த ஆன்டி வைரஸ் என்பது வைரஸ் பாதிக்கப்பட்ட பைல்களை நீக்க மட்டும் செய்யாது. மாறாக ஸ்மார்ட்போனை எல்லா விதத்திலும் முழுவதுமாக பாதுகாப்பாக வைத்திருக்க உதவுகிறது. அவ்வாறு உதவும் சில சிறந்த மொபைல் ஆன்டி வைரஸ் மென்பொருள்களின் தொகுப்பு.

McAfee Mobile Security

விண்டோஸ்இயங்குதளங்களில் அதிகம் பயன்பாட்டில் இருக்கும் ஒன்று. மொபைல் திருடப்பட்டால் திருடியவனின் முகத்தை புகைப்படம் எடுப்பதோடு மட்டுமின்றி இருக்கும் இடத்தையும் சேர்த்து, பதிவு செய்யப்பட்ட இமெயிலுக்கு அனுப்பி வைக்கும், மேலும் திருடப்பட்ட மொபைலில் உள்ள தகவல்களையும் இதன் மூலமாக எளிதில் அழித்து விடலாம். பாதுகாப்பு தொடர்பாக ஆலோசனை வழங்கும் மேலும் அது தொடர்பான செய்திகளையும் நமக்குக் காண்பிக்கும். ஆண்ட்ராய்டு வேர் (Wear) டிவைஸ்களிலும் பயன்படுத்துமாறு வடிவமைக்கப்பட்டுள்ளது

ஆப் ரேட்டிங்:4.4
டவுன்லோட் லின்க்

Avast
அவாஸ்ட் ஆன்டி வைரஸ் ஏற்கெனவே மிகப்பிரபலமான ஒன்று. பயன்படுத்த எளிமையாக வடிவமைக்கப்பட்டிருப்பது இதன் சிறப்பு. வைரஸ்களை தவிர்ப்பதற்காக அடிக்கடி அப்டேட் கிடைத்துக்கொண்டே இருக்கும். ஆப் லாக், வைரஸ் ஸ்கேனிங், கால் பிளாக்கிங் என வசதிகள் இருக்கும். 230 மில்லியனுக்கும் அதிகமான முறை பிளே ஸ்டோரில் டவுன்லோட் செய்யப்பட்டுள்ளது. 

ஆப் ரேட்டிங்:4.5
டவுன்லோட் லின்க்

Kaspersky

ஆண்ட்ராய்டுக்கான மிகச்சிறந்த ஆன்டி வைரஸ்களில் ஒன்றாக கருதப்படும் இது இன்ஸ்டால் செய்யப்படும் ஆப்களை தானாகவே ஸ்கேன் செய்கிறது. அது ப்ளேஸ்டோரிலிருந்து பெறப்பட்டாலும் கூட அதை ஆராய்கிறது. யாராவது தவறாக ஸ்மார்ட்போனை அன்லாக் முயன்றால் முன்புற கேமரா மூலம் படம் எடுத்துவிடும் இதனால் அன்லாக் செய்ய முயன்ற நபரை எளிதில் கண்டறியலாம்.

ஆப் ரேட்டிங்:4.7
டவுன்லோட் லின்க்

AVG

மற்ற ஆன்டி வைரஸ் மென்பொருள்களைப் போன்று மொபைல் செயல்பாட்டையோ அல்லது பேட்டரியையோ பாதிக்காமல் செயல்படுவது இதன் சிறப்பம்சம்.இது இன்ஸ்டால் செய்யப்பட்ட மொபைல் தொலைந்தால் கூகுள் மேப் மூலமாக இருக்கும் இடத்தை அறிய முடியும்.அளவில் மிகக் குறைவாக வடிவமைக்கப்பட்டிருப்பதால் மொபைல் மெமரி குறைந்தளவே தேவைப்படும்.

ஆப் ரேட்டிங்:4.5
டவுன்லோட் லின்க்

Eset Mobile Security

இன்ஸ்டால் செய்யப்படும் ஆப்கள் மட்டுமில்லாமல் டவுன்லோட் செய்யப்படும் அனைத்தையும் ஸ்கேன் செய்கிறது. பெரும்பாலான வசதிகளை இலவசமாகவே பயன்படுத்தலாம். தேவையற்ற அழைப்புகள் மற்றும் மெசேஜ்களைத் தடுக்கும் வசதி இருக்கிறது. மேலும் டேப்லட்களிலும் எளிதாகப் பயன்படுத்தலாம்.

ஆப் ரேட்டிங் : 4.7
டவுன்லோட் லின்க்

ஆன்டி வைரஸ்களால் சில எதிர்மறை பிரச்னைகளும் உண்டு. அதில் முக்கியமானது பேட்டரி. அனைத்து ஆன்டி வைரஸ்களுமே சார்ஜை விரைவில் தீர்த்துவிடும். ஏனெனில், அவற்றின் வேலையை முழுமையாக செய்ய அவ்வளவு சக்தி தேவைப்படும். அதனால், ஆன்டிவைரஸ் பயன்படுத்துபவர்கள், மொபைலில் சார்ஜ் குறைவாக இருக்கும்போது அவற்றை disable செய்து வைக்கலாம்

Wednesday 3 May 2017

Train ticket methods

யானையையும் ரயிலையும் நேசிக்காதவர்கள் யாரும் இருக்க முடியாது. எந்த வயதினருக்கும் ரயிலின் பிரமாண்டமும் அந்தப் பயண அனுபவமும்  மலைக்க வைக்கும் பேரானந்தம். ஆனால், முன்னேற்பாடுகள் சரியில்லையென்றால் பயணமே களை இழந்து போய்விடும். அதுதான் ரயில்! குறிப்பாக  முன்பதிவு செய்து பயணிக்க விரும்புகிறவர்கள் அடிப்படைத் தகவல்களை அறிவது அவசியம். காத்திருப்போர் பட்டியல், அதன் பிரிவுகள், தட்கல்  முறையில் டிக்கெட் பதிவு செய்யும் வசதி, சலுகைகள் என முக்கியமானவை இங்கே... 

வெயிட்டிங் லிஸ்ட் (WL)

பல நேரங்களில் டிக்கெட் முன்பதிவு செய்தால் உடனே கிடைத்துவிடாது. ‘வெயிட்டிங் லிஸ்ட்தான் இருக்கிறது’ என்பார்கள். கீலி என்பது ரயிலில்  இருக்கையோ, படுக்கை வசதியோ வேண்டி காத்திருப்போர் பட்டியல். ஏற்கனவே கன்ஃபார்ம் டிக்கெட் உள்ளவர்கள் தங்களுடைய டிக்கெட்டை கேன்சல்  செய்வதைப் பொருத்தே, வெயிட்டிங் லிஸ்ட்டில் உள்ள நம் இடம் கன்ஃபார்ம் ஆகும். அப்படியே நடந்தாலும், சீனியாரிட்டி படி, நமக்கு முன்னால்  இருப்பவர்களுக்கெல்லாம் கிடைத்த பிறகுதான் உறுதி செய்யப்படும். ரயில் கிளம்புவதற்கு 2 மணி நேரத்துக்கு முன்பாக இருக்கை, படுக்கை வசதி  கிடைத்தவர்களுக்கான சார்ட் தயார் செய்து, ரயில் நிலையத்தில் ஒட்டி வைப்பார்கள்.

இணையத்திலும் தொலைபேசியிலும் கூட அறிந்து கொள்ளலாம். அதிலும் டிக்கெட் கன்ஃபார்ம் ஆகவில்லை என்றால், வெயிட்டிங் லிஸ்ட் டிக்கெட்டை  வைத்து பயணம் செய்ய முடியாது. அது சட்டப்படி தவறு. ஆன்லைனில் டிக்கெட் முன் பதிவு செய்திருந்தால், சம்பந்தப்பட்ட வங்கிக் கணக்குக்கோ,  கிரெடிட் கார்டு கணக்குக்கோ பணம் திரும்பப் போய்விடும். ரயில் நிலையத்தில் பதிவு செய்திருந்தால், குறிப்பிட்ட மணி நேரங்களுக்குள் நேரடியாக  டிக்கெட்டை கேன்சல் செய்து பணம் பெற வேண்டும். இல்லையெனில் ரயில்வே அதிகாரிக்கு விண்ணப்பித்தே பெற வேண்டியிருக்கும். ஒரு சிறு  தொகையைக் கட்டணமாக எடுத்துக் கொண்டு மீதித் தொகை தரப்படும்.

ஜெனரல் வெயிட்டிங் லிஸ்ட் (GNWL) / பூல்டு கோட்டா வெயிட்டிங் லிஸ்ட் (PQWL)

முன்பதிவு செய்யும்போது எந்த வகையான வெயிட்டிங் லிஸ்ட் இருக்கிறது என்பதையும் கவனிக்க வேண்டும். ஜெனரல் வெயிட்டிங் லிஸ்ட் என்பது  கிட்டத்தட்ட ‘பாயின்ட் டூ பாயின்ட்’ சேவை மாதிரி. ரயில் கிளம்பும் இடத்திலிருந்து சென்று சேரும் கடைசி நிலையம் வரைக்கும் பயணம்  செய்வோருக்கு முன்னுரிமை அளிப்பதுதான் இந்த ஜெனரல் வெயிட்டிங் லிஸ்ட். உதாரணமாக, சென்னை எழும்பூரில் இருந்து மதுரை செல்பவர்  பாண்டியன் எக்ஸ்பிரஸில் டிக்கெட் புக் செய்தால், காத்திருப்போர் பட்டியல் ஜெனரல் வெயிட்டிங் லிஸ்ட் என்று இருக்கும். காரணம், அந்த ரயில்  சேரும் கடைசி நிலையம் மதுரை.

சென்னை எழும்பூரில் இருந்து திருச்சிக்கு செல்வதற்கு அதே ரயிலில் புக் செய்தால் காத்திருப்போர் பட்டியல், பூல்டு கோட்டா வெயிட்டிங் லிஸ்ட்  (PQWL) என்று குறிப்பிடப்பட்டிருக்கும். எழும்பூரில் இருந்து திருச்சிக்கு செல்ல ராக்ஃபோர்ட் எக்ஸ்பிரஸில் புக் செய்தால் ‘ஜெனரல் வெயிட்டிங்  லிஸ்ட்’. ஏனென்றால், ராக் ஃபோர்ட் சென்று சேரும் கடைசி நிலையம் திருச்சி. இதுதான் அடிப்படை. ஜெனரல் வெயிட்டிங் லிஸ்ட்டில் வாங்கிய  டிக்கெட், காத்திருப்போர் எண்ணிக்கை அதிகமாக இருந்தாலும் எளிதில் கன்ஃபார்ம் ஆகிவிடும். ஆனால், பூல்டு கோட்டா வெயிட்டிங் லிஸ்டில்  இருப்போருக்கு டிக்கெட் கன்ஃபார்ம் ஆவது சற்றுக் கடினம். ஸ்லீப்பர், ஏ.சி. என்று எந்த வகுப்பாக இருந் தாலும் இந்த முறையில்தான் டிக்கெட்  கிடைக்கும்.

RQWL / RLWL / RSWL

ஒரு வழித்தடத்தில் இருக்கும் பெரிய ஸ்டேஷன்களுக்கு அருகில் இருக்கும் இடங்கள் எல்லாம் ரிமோட் கோட்டா வெயிட்டிங் லிஸ்டின் (RQWL) கீழ்  வரும். அதன்படி ரிமோட் லொகேஷன் வெயிட்டிங் லிஸ்ட் (RLWL), ரிமோட் ஸ்டேஷன் வெயிட்டிங் லிஸ்ட் (RSWL) எல்லாமே கிட்டத்தட்ட ஒரே  மாதிரியானவைதான். ஒரு வழித்தடத்தில் இரண்டு ஸ்டேஷன்களுக்கு இடையே பயணம் செய்யும் போது இந்த வெயிட்டிங் லிஸ்ட்.

உதாரணமாக, சென்னையில் இருந்து டிக்கெட் புக் செய்தால் இந்த வெயிட்டிங் லிஸ்ட் வராது. ஈரோட்டில் இருந்து சேலத்துக்கு புக் செய்தால் இந்த  வெயிட்டிங் லிஸ்ட் வரும். குறைவான தூரத்தில் பயணம் செய்ய முன்வருபவர்களுக்கு அந்த வசதி எளிதாகக் கிடைத்து விடும். றினிகீலி லிஸ்டில்  இருப்பவர்களுக்கு டிக்கெட் கிடைத்த பிறகு, இடம் இருந்தால் இந்த வெயிட்டிங் லிஸ்ட்டில் இருப்பவர்களுக்கு டிக்கெட் கிடைக்கும். இந்த வெயிட்டிங்  லிஸ்ட்டில் குறிப்பிட்ட அளவுக்கு படுக்கை வசதி ஒதுக்கப்படுகிறது .

ரிசர்வேஷன் எகெய்ன்ஸ்ட் கேன்சலேஷன் (RAC)

முன்பதிவு செய்யும் போது ஆர்.ஏ.சி. என்று குறிப்பிட்டிருந்தால் ரயிலில் பயணம் செய்வது உறுதிப்படுகிறது. வெயிட்டிங் லிஸ்ட்டில் இருந்து, அடுத்த  கட்டமாக ஆர்.ஏ.சி.க்கு முன்னேறி வந்திருந்தாலும் பயணம் செய்யலாம். ஆனால், படுக்கை வசதியில்லாமல், இருக்கையில் அமர்ந்து செல்ல  வேண்டியிருக்கும். முன்பதிவில் டிக்கெட் கிடைத்தவர்கள் கடைசி நேரத்தில் பயணம் செய்யாவிட்டால் அந்த இருக்கை உங்களுக்குக் கிடைக்கும்.  இதுவும் சீனியாரிட்டி முறையில்தான் கிடைக்கும். இருக்கையில் அமர்ந்து பயணம் செய்ய விருப்பமில்லை என்றால், அபராதம் இல்லாமல் கேன்சல்  செய்து கொள்ளும் வசதியும் இருக்கிறது. ஏ.சி. பெட்டியில் ஆறு பேருக்கும், ஸ்லீப்பர் பெட்டியில் பத்து பேருக்கும் ஆர்.ஏ.சி. முறையில் இருக்கைகள்  ஒதுக்கப்படுகின்றன.

தட்கல் (Tatkal)

அவசர காலத்தில் ரயிலில் பயணம் செய்ய முன்பதிவு செய்யும் முறை இந்த தட்கல் முறை. அதாவது, ‘விரைவு முன்பதிவு’. ஒவ்வொரு ரயிலிலும்  10 முதல் 30 சதவிகிதம் டிக்கெட்டுகள் தட்கல் முறையில் ஒதுக்கப்படுகின்றன. இதில் பயணம் செய்யக் கட்டணம் அதிகம். அதோடு பயணம் செய்யும்  நாளுக்கு முந்தைய தினத்தில்தான் முன்பதிவு செய்ய முடியும். இதிலும் CKWL என்ற வெயிட்டிங் லிஸ்ட் இருக்கிறது. சீனியாரிட்டி முறைப்படி  டிக்கெட் கன்ஃபார்ம் ஆகும். சிரிகீலி தவிர, உறுதிப் படுத்தப்பட்ட தட்கல் டிக்கெட்டை கேன்சல் செய்தால், பணம் திரும்பக் கிடைக்காது. காலை 10  மணிக்கு அடுத்த நாள் பயணத் துக்கான தட்கல் முன்பதிவு ஆரம்பிக்கும். ரயில் நிலைய  மையங்களிலோ, இணையதளம் மூலமாகவோ தட்கல்  முன்பதிவு செய்யலாம். முன்பதிவு செய்யும் போதே, அடையாள அட்டை அவசியம்.

எமர்ஜென்சி கோட்டா (EQ)

நாடாளுமன்ற உறுப்பினர்கள், நீதிபதிகள், அமைச்சர்கள், அரசு அதிகாரிகள் ஆகியோருக்கும், அவர்கள் அளிக்கும் பரிந்துரையின் அடிப்படையிலும்  பயணம் செய்ய எமர்ஜென்சி கோட்டா முறையில் சிறப்பு முன்னுரிமை வழங்கப்படுகிறது. ஒவ்வொரு ரயிலிலும் குறைந்தது 20 படுக்கை வசதிகள்  (பெர்த்) மற்றும் ஏ.சி. பெட்டியில் குறைந்தது 4 இருக்கைகள் இந்த கோட்டாவில் ஒதுக்கப்படுகின்றன.

அடையாளச் சான்று (ID)

முன்பதிவு செய்து பயணம் செய்பவர்கள் எஸ்.எம்.எஸ். / ஈ-டிக்கெட் / பேப்பர் டிக்கெட் உடன், ரயில்வே துறையால் அங்கீகரிக்கப்பட்ட அடையாளச்  சான்று (ஒரிஜினல்) கொண்டு செல்ல வேண்டும். ஒன்றுக்கும் மேற்பட்டவர்கள் பயணம் செய்யும் போது, ஒருவர் அடையாளச் சான்று வைத்திருந்தால்  போதுமானது. 

ஏற்றுக்கொள்ளப்படும் அடையாள அட்டைகள் எவை?

வாக்காளர் அடையாள அட்டைமத்தியமாநில அரசு போட்டோ வுடன் வழங்கிய அடையாள அட்டை, பாஸ்போர்ட்ஓட்டுநர் உரிமம், வரு மானவரித்துறை வழங்கிய பான்கார்டு, பள்ளி அடையாள அட்டை, புகைப் படத்துடன் கூடிய தேசியமயமாக் கப்பட்ட வங்கியின் பாஸ்புக், புகைப் படத்துடன் கூடிய லேமினேட் செய்யப்பட்ட கிரடிட் கார்டு.

Tuesday 2 May 2017

தட்கல் ரயில் டிக்கெட்

  தட்கல் ரயில் டிக்கெட் முன்பதிவுக்கான நேரம்  மாற்றப்பட்டுள்ளது. இந்த நடைமுறை இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது.

இதுவரை அனைத்து ரயில் பெட்டிகளுக்குமான தட்கல் முன்பதிவு காலை 10 மணிக்கு தொடங்கியது. இந்நிலையில், தட்கல் முன்பதிவு நேரத்தை ரயில்வே நிர்வாகம் இன்று முதல் மாற்றி அமைத்துள்ளது.

அதன்படி, குளிர்சாதன பெட்டிகளுக்கு, வழக்கம்போல் காலை 10 மணி முதல் 11 மணிவரை முன்பதிவு நடைபெறும். ஏ.சி. அல்லாத பெட்டிகளுக்கான முன்பதிவு நேரம், காலை 11 மணி முதல் 12 மணிவரை என மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. டிக்கெட் கவுன்ட்டர், ஐ.ஆர்.சி.டி.சி. இணையதளம் என இரண்டுக்கும் இது பொருந்தும்.

அதே சமயத்தில், சாதாரண டிக்கெட் மற்றும் தட்கல் டிக்கெட் முன்பதிவு தொடங்கிய முதல் 30 நிமிட நேரம், ஐ.ஆர்.சி.டி.சி. ஏஜெண்டு உள்பட அனைத்துவகை ஏஜெண்டுகளுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

அதாவது, சாதாரண டிக்கெட்டுகளை காலை 8 மணி முதல் 8.30 மணிவரையும், தட்கல் டிக்கெட்டுகளை காலை 10 மணி முதல் 10.30 மணிவரையும், காலை 11 மணி முதல் 11.30 மணிவரையும் ஏஜெண்டுகள் எடுக்க முடியாது.

மேலும், உறுதி செய்யப்பட்ட தட்கல் டிக்கெட்டுகளை ரத்து செய்யும் பயணிகளுக்கு பாதி கட்டணத்தை திருப்பித்தர ரயில்வே நிர்வாகம் முடிவு செய்துள்ளது. இதற்கு முன்பு தட்கல் டிக்கெட் பணம் திருப்பித் தரப்படுவது இல்லை என்பது குறிப்பிடத்தக்கது