Tuesday, 2 May 2017

தட்கல் ரயில் டிக்கெட்

  தட்கல் ரயில் டிக்கெட் முன்பதிவுக்கான நேரம்  மாற்றப்பட்டுள்ளது. இந்த நடைமுறை இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது.

இதுவரை அனைத்து ரயில் பெட்டிகளுக்குமான தட்கல் முன்பதிவு காலை 10 மணிக்கு தொடங்கியது. இந்நிலையில், தட்கல் முன்பதிவு நேரத்தை ரயில்வே நிர்வாகம் இன்று முதல் மாற்றி அமைத்துள்ளது.

அதன்படி, குளிர்சாதன பெட்டிகளுக்கு, வழக்கம்போல் காலை 10 மணி முதல் 11 மணிவரை முன்பதிவு நடைபெறும். ஏ.சி. அல்லாத பெட்டிகளுக்கான முன்பதிவு நேரம், காலை 11 மணி முதல் 12 மணிவரை என மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. டிக்கெட் கவுன்ட்டர், ஐ.ஆர்.சி.டி.சி. இணையதளம் என இரண்டுக்கும் இது பொருந்தும்.

அதே சமயத்தில், சாதாரண டிக்கெட் மற்றும் தட்கல் டிக்கெட் முன்பதிவு தொடங்கிய முதல் 30 நிமிட நேரம், ஐ.ஆர்.சி.டி.சி. ஏஜெண்டு உள்பட அனைத்துவகை ஏஜெண்டுகளுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

அதாவது, சாதாரண டிக்கெட்டுகளை காலை 8 மணி முதல் 8.30 மணிவரையும், தட்கல் டிக்கெட்டுகளை காலை 10 மணி முதல் 10.30 மணிவரையும், காலை 11 மணி முதல் 11.30 மணிவரையும் ஏஜெண்டுகள் எடுக்க முடியாது.

மேலும், உறுதி செய்யப்பட்ட தட்கல் டிக்கெட்டுகளை ரத்து செய்யும் பயணிகளுக்கு பாதி கட்டணத்தை திருப்பித்தர ரயில்வே நிர்வாகம் முடிவு செய்துள்ளது. இதற்கு முன்பு தட்கல் டிக்கெட் பணம் திருப்பித் தரப்படுவது இல்லை என்பது குறிப்பிடத்தக்கது

No comments:

Post a Comment