Monday 24 April 2017

Powerbank

பட்ஜெட் விலையில் பவர் பேங்க்... எது வாங்கலாம்?! #GadgetTips
கருப்பு

மொபைல் பயன்படுத்துபவர்கள் பவர் பேங்க் வைத்திருக்க வேண்டியது அவசியமா என்ற கேள்விக்கு நிச்சயமாக 'ஆம்' என்றுதான் பதில் சொல்ல வேண்டியிருக்கிறது. ஸ்மார்ட்போன்களின் பேட்டரி திறன் தொடர்ந்து அதிகரித்து வந்தாலும், 4ஜி நெட்வொர்க் சேவை, பலதரப்பட்ட அப்ளிகேஷன்கள் பேட்டரியின் சார்ஜை எளிதில் தீர்க்கின்றன. எனவே, அலுவலகத்தில் பணிபுரிபவர்களும், அதிகம் பயணம் செய்பவர்களும் பவர் பேங்க் வைத்திருக்க வேண்டியது அவசியமாகிறது. பட்ஜெட் விலையில் தற்போது நிறைய பவர் பேங்குகள் கிடைக்கின்றன. அவற்றைப் பற்றிய தொகுப்பு தான் இது.

Intex IT-PB11K :

எலக்ட்ரானிக்ஸ் பொருள்கள் உற்பத்தி செய்யும் இன்டெக்ஸ் நிறுவனத்தின் தயாரிப்புகளில் ஒன்றான இந்த பவர் பேங்க், வாடிக்கையாளர்கள் நம்பகமான தேர்வாக இருக்கிறது. ஒரே நேரத்தில் மூன்று எலக்ட்ரானிக்ஸ் பொருள்களுக்கு யூ.எஸ்.பி கேபிள் வழியாக சார்ஜ் ஏற்றிக்கொள்ள முடியும். சார்ஜ் இன்டிகேட்டர் இருப்பதால் பவர் பேங்கின் சார்ஜ் அளவைத் தெரிந்துகொள்ள முடியும். ஃப்ளாஷ் லைட் இருப்பது இதன் கூடுதல் சிறப்பு. பட்ஜெட்க்கு ஏற்ற தரமான தயாரிப்பு என வாடிக்கையாளர்கள் பலரும் இதற்கு சான்றளிக்கிறார்கள்.

விலை : ரூ.899/-
பேட்டரி திறன் : 11000 mAh
எடை : 280 கிராம்

Mi Power Bank (10000 mAh) :

கையடக்க அளவில் பவர் பேங்க் வேண்டும் என நினைப்பவர்களுக்கு எம்.ஐ பவர் பேங்க் நல்ல சாய்ஸாக இருக்கும். ஓவர் சார்ஜிங் ஆகாத அளவுக்கு இதில் தொழில்நுட்ப வசதி இருப்பதால், பேட்டரி நீடித்து உழைக்கிறது. விரைவில் சூடாவதும் இதில் தடுக்கப்படுகிறது. ஆனால் ஒரேயொரு யூ.எஸ்.பி அவுட்புட் மட்டுமே இருப்பதால், ஒரு நேரத்தில் ஒரு எலக்ட்ரானிக் பொருளை மட்டுமே இதன் மூலம் சார்ஜ் செய்யமுடியும். இதிலும் சார்ஜ் இன்டிகேட்டர் இருக்கிறது. இந்த மாடல் போன்றே அதிகம் போலியான பொருள்கள் சந்தையில் கிடைப்பதால் வாங்கும்போது கவனம் தேவை.

விலை : ரூ.1,299/-
பேட்டரி திறன் : 10000 mAh
எடை : 207 கிராம்

Ambrane P-1310 :

Ambrane P-1310 மாடலின் சிறப்பே இதன் ஸ்டைலிஷான வடிவமைப்பு தான். பெர்ஃபார்மன்ஸ் விஷயத்தில் இந்த மாடல் ஒரு கோலி! இரண்டு யூ.எஸ்.பி அவுட்புட் பாய்ன்ட்கள், 13000 mAh பேட்டரி திறன், LED ஃப்ளாஷ் லைட் என இதன் சிறப்பம்சங்களை அடுக்கிக் கொண்டே போகலாம். இதன் பேட்டரி திறன் அதிகம் என்பதால் அதிகமுறை ஸ்மார்ட்போன்களை சார்ஜ் செய்யமுடியும். விரைவில் சூடாகாது என்பதும், அதிக பேட்டரி திறன் கொண்டிருப்பதும் இதன் சிறப்பம்சங்கள். ஒரு வருட வாரன்ட்டியுடன் இந்த மாடல் சந்தையில் கிடைக்கிறது.

விலை : ரூ.999/-
பேட்டரி திறன் : 13000 mAh
எடை : 250 கிராம்

Flipkart SmartBuy Power Bank :

இந்தியாவின் மிகப்பெரிய ஆன்லைன் ஷாப்பிங் நிறுவனமான ஃப்ளிப்கார்ட், SmartBuy என்ற பெயரில் பல புதிய பொருள்களை அறிமுகப்படுத்தி இருக்கிறது. ஸ்மார்ட்போன் அளவில் இந்த பவர் பேங்க் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்திய தர நிர்ணய அமைப்பின் அங்கிகாரம் பெற்றிருப்பதால் இதன் தரத்தைப் பற்றிய சந்தேகம் தேவை இல்லை. விரைவில் சார்ஜ் ஏற்றிக் கொள்ளும் திறன் இதன் கூடுதல் சிறப்பம்சம். இரண்டு யூ.எஸ்.பி அவுட்புட் சார்ஜிங் பாய்ன்ட்கள் இதில் இருக்கின்றன. எடை கொஞ்சம் அதிகம் என்பது இதன் மைனஸ்.

விலை : ரூ.849/-
பேட்டரி திறன் : 11000 mAh
எடை : 270 கிராம்


Huawei Honor 13000 mAh :

ஹானர் ப்ராண்ட் மொபைல் விரும்பிகளுக்கு ஏற்றது இந்த பவர் பேங்க். இதே பேட்டரி திறன் கொண்ட பவர் பேங்குகள் இதைவிடக் குறைவான விலைக்குக் கிடைத்தாலும், தரம் முக்கியம் என நினைப்பவர்களின் சாய்ஸாக இது இருக்கிறது. இன்புட் மற்றும் அவுட்புட் இரண்டும் 5V மின்சக்தி கொண்டது. இரண்டு யூ.எஸ்.பி போர்ட்களின் வழியாக ஒரே நேரத்தில் இரண்டு எலக்ட்ரானிக் சாதனங்களுக்கு சார்ஜ் ஏற்றிக்கொள்ள முடியும். விரைவாக சார்ஜ் ஏறுவது இதன் ப்ளஸ் பாய்ன்ட். ஆனால், 325 கிராம் எடை கொண்டது என்பது இதன் சிறிய குறை.

விலை : ரூ.1,299/-
பேட்டரி திறன் : 13000 mAh
எடை : 325 கிராம்

பவர் பேங்குகளைப் பொறுத்தவரை பொதுவாக அதன் மொத்தத் திறனின் மூன்றில் இரண்டு பங்கு மட்டுமே அவுட்புட் திறனாக இருக்கின்றன. பவர் பேங்க் முழுவதும் சார்ஜ் ஏற கொஞ்சம் நேரம் அதிகம் ஆகும் என்பதால் வெளியூருக்குச் செல்வதற்கு முந்தைய நாளே சார்ஜ் ஏற்றிக்கொள்ள திட்டமிடுதல் அவசியம். 4ஜி மொபைல் பயன்படுத்தும்போது மொபைல் சார்ஜ் சீக்கிரம் தீரும் என்கிறார்கள். எனவே தேவையற்ற நேரங்களில் டேட்டா பயன்படுத்துவதைக் குறைக்கலாம்.

No comments:

Post a Comment