Friday 7 April 2017

ஏப்ரல் மாதத்தின் சிறப்புகள்

தெரிந்துகொள்ளுங்கள்....(ஏப்ரல் மாதம்)

ஏப்ரல் மாதம் பிரபலங்களின் பிறந்த தினங்கள்
1, 1578 வில்லியம் ஹார்வி - ரத்த ஓட்டம் பற்றி ஆராய்ந்த விஞ்ஞானி.
1, 1937 ஹமீத் அன்சாரி - இந்தியக் குடியரசுத் துணைத்
தலைவர். இரண்டாம் முறையாகத் தேர்வு பெற்றவர்.
2, 1881 வா.வே. சுப்ரமணிய அய்யர் - தமிழறிஞர், சுதந்திரப் போராட்ட வீரர்.
3, 1914 ஃபீல்ட் மார்ஷல் சாம் மானெக்ஷா - இந்தியாவின் முதல் ராணுவ தளபதி.
4, 1017 ஸ்ரீராமானுஜர் - இந்து மதத் துறவி.
5, 1827 ஜோசப் லிஸ்டர் - ஆன்டிசெப்டிக் மருத்துவ
முறையைக் கண்டறிந்தவர்.
6, 1815 மகாவித்வான் மீனாட்சி சுந்தரம் பிள்ளை -
சேக்கிழார் பிள்ளைத்தமிழ் இயற்றிய தமிழ் பேரறிஞர்.
7, 1770 வில்லியம் வேர்ட்ஸ்வொர்த் - ஆங்கிலக் கவிஞர்.
7, 1920 ரவிசங்கர் - சித்தார் இசைக் கலைஞர்.
10, 1847 ஜோசப் புலிட்சர் - இலக்கியம், இசை, நாடகம் போன்ற துறைகளில் சிறந்தோர்க்கு "புலிட்சர் விருது' வழங்கப்படுகிறது.
10, 1894 ஜி.டி. பிர்லா - பிர்லா குழுமத் தலைவர்.
11, 1869 கஸ்தூரிபா காந்தி - மகாத்மா காந்தியின்
துணைவியார்.
13, 1930 பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் - திரைப்படப் பாடலாசிரியர்.
14, 1891 டாக்டர். அம்பேத்கார் - இந்திய அரசியல் சட்டத்தை வடிவமைத்த சட்ட வல்லுநர்.
16, 1867 வில்பர் ரைட் - விமானத்தைக் கண்டுபிடித்த
ரைட் சகோதரர்களில் ஒருவர்.
16, 1889 சார்லி சாப்ளின் - உலகப் புகழ் நகைச்சுவை நடிகர்.
17, 1961 கீத் சேத்தி - இந்தியர், உலக பில்லியர்ட்ஸ் சேம்பியன்.
17, 1972 முத்தையா முரளீதரன் - இலங்கை கிரிக்கெட் வீரர்.
19, 1957 முகேஷ் அம்பானி - ரிலையன்ஸ் குழுமத் தலைவர்.
19, 1977 அஞ்சு பாபி ஜார்ஜ் - இந்தியத் தடகள வீராங்கனை.
20, 1950 சந்திரபாபு நாயுடு - முன்னாள் ஆந்திர முதல்வர், தெலுங்கு தேசத் தலைவர்.
21, 1926 ராணி எலிசபெத் ஐஐ - இங்கிலாந்து அரசி.
22, 1870 விளாதிமிர் லெனின் - சோவியத் ரஷ்யாவின்
முன்னாள் (மறைந்த) தலைவர்.
23, 1564 வில்லியம் ஷேக்ஸ்பியர் - புகழ்பெற்ற ஆங்கில
நாடகாசிரியர்.
24, 1973 சச்சின் டெண்டுல்கர் - பாரத ரத்னா விருது பெற்ற கிரிக்கெட் வீரர்.
25, 1874 மார்க்கோனி - ரேடியோவைக் கண்டறிந்த
விஞ்ஞானி.
25, 1912 பேராசிரியர் மு. வரதராசனார் - முன்னாள் பல்கலைக்கழகத் துணை வேந்தர்.
27, 1949 பி. சதாசிவம் - உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி.
28, 1937 சதாம் ஹுசைன் - ஈராக் முன்னாள் அதிபர்.
29, 1848 ராஜா ரவிவர்மா - புகழ்பெற்ற ஓவியக் கலைஞர்.
29, 1891 புரட்சிக்கவிஞர் பாரதிதாசன்
30, 1987 ரோஹித் சர்மா - கிரிக்கெட் வீரர்.

நினைவு தினங்கள்
1, 2012 என்.கே.பி. சால்வே - முன்னாள் மத்திய அமைச்சர்.
4, 1968 மார்டின் லூதர் கிங் - அமெரிக்கர். நீக்ரோ மக்கள்
உரிமைக்காகப் பாடுபட்டவர்.
5, 2007 லீலா மஜூம்தார் - வங்காள எழுத்தாளர்.
5, 1957 டாக்டர் அழகப்ப செட்டியார் - கல்வியாளர், வள்ளல்.
8, 1857 மங்கள் பாண்டே - சுதந்திரப் போராட்ட வீரர்.
8, 1894 பங்கிம் சந்திர சட்டோபாத்தியாய - வங்காள
எழுத்தாளர்.
8, 1973 பிக்காசோ - ஓவியர்.
8, 2013 மார்கரெட் தாட்சர். பிரிட்டனின் முதல் பெண் பிரதமர்.
10, 1995 மொரார்ஜி தேசாய் - முன்னாள் பாரதப் பிரதமர்.
12, 1817 சார்லஸ் மெஸ்ஸியர் - வால் நட்சத்திர ஆராய்ச்சி
விஞ்ஞானி.
12, 1945 ரூஸ்வெல்ட் அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி.
18, 1955 ஐன்ஸ்டீன் - பிரபஞ்ச ஆராய்ச்சியாளர், விஞ்ஞானி.
14, 1962 எம். விஸ்வேஸ்வரய்யா - கிருஷ்ணராஜசாகர் அணை கட்டிய பொறியாளர்.
14, 1950 ரமணர் மகரிஷி.
14, 2013 ராமபிரசாத் கோயாங்கா - தொழில் அதிபர்.
15, 1990 எஸ். பாலசந்தர் - வீணை வித்வான், தமிழ்ப்பட
இயக்குநர்.
19, 1882 சார்லஸ் டார்வின் - விஞ்ஞானி.
19, 2013 சிவந்தி ஆதித்தன் - தினந்தந்தி நாளிதழ் அதிபர்.
21, 1978 டி.ஆர். மகாலிங்கம் - தமிழ்த் திரைப்பட நடிகர்,
பாடகர்.
21, 2013 சகுந்தலா தேவி - கணித மேதை.
21, 1964 பாரதிதாசன் - புரட்சிக் கவிஞர்.
22, 2013 லால்குடி ஜெயராமன் - வயலின் மேதை.
23, 1994 ரிச்சர்ட் நிக்ஸன் - அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி.
23, 1992 சத்யஜித்ரே - வங்காளத் திரைப்படத் தயாரிப்பாளர்.
24, 2011 சத்யசாயி பாபா - இந்து மத போதகர்.
26, 1920 ஸ்ரீனிவாச ராமானுஜன் - கணித மேதை.
28, 1942 உ.வே. சாமிநாத அய்யர் (உ.வே.சா.) ஓலைச்
சுவடிகளிலிருந்த நூல்களைச் சேகரித்து அச்சிட
உதவிய மேதை.
29, 1980 ஆல்ஃப்ரெட் ஹிட்ச்காக் - ஆங்கிலப்பட இயக்குநர்.
28, 1945 முசோலினி - இத்தாலி நாட்டின் சர்வாதிகாரி.

ஏப்ரல் மாத முக்கிய நிகழ்வுகள்
ஏப்ரல் 1
1935 - இந்தியாவில் ரிசர்வ் வங்கி துவக்கப்பட்டது.
1912 - இந்தியத் தலைநகராக தில்லி அறிவிக்கப்பட்டுச் செயல்படுத்தப்பட்டது. முன்னர் கொல்கத்தா
தலைநகராக இருந்தது.
1936 - பீகாரிலிருந்து ஒடிசா பிரிக்கப்பட்டது.
1985 - பயிர் பாதுகாப்பு (இன்சூரன்சு) அமலாக்கப்பட்டது.
2012 - வங்கிக் காசோலைகள், கேட்பு வரைவோலைகள் 6 மாத காலத்திலிருந்து 3 மாத காலமே செல்லுபடி
யாகும் என ரிசர்வ் வங்கி அறிவிப்பு செய்தது.
2, 1970 அசாம் மாநிலத்திலிருந்து பிரிந்து மேகலாயா
உருவானது.
4, 1973 ரஷ்யா - சல்யூட் - 2 விண்கலத்தை விண்ணில்
செலுத்தியது.
4, 1991 சென்னை - லண்டன் நேரடி விமான சர்வீஸ்
துவங்கியது.
5, 1930 தண்டி யாத்திரையில் காந்தியடிகள் கையில் அள்ளிய உப்பை ஏலம் போட்டார். ரூ. 1600-க்குப் போனது.

5, 1980 பாரதீய ஜனதா கட்சி உதயமானது.
6, 1805 இந்திய கோஹினூர் வைரம் இங்கிலாந்து சென்றது.
6, 1896 முதல் ஒலிம்பிக் போட்டி ஏதென்ஸ் நகரில் நடந்தது. 13 நாடுகள் பங்கேற்றன. முதலாம் ஜார்ஜ் அரசர்
விழாவைத் தொடங்கி வைத்தார்.
6, 1942 இந்தியப் பகுதி மீது ஜப்பான் விமானம் குண்டு
வீசியது.
7, 2005 இந்தியா - பாகிஸ்தான் - "ஸ்ரீநகர் டூ முஸôபர்பாத்' பேருந்து போக்குவரத்து ஆரம்பம்.
10, 1790 கண்டுபிடிக்கும் பொருட்களுக்கு அமெரிக்கா
காப்புரிமையை அறிமுகம் செய்தது.
11, 1953 சென்னை நகரில் "ட்ராம் சர்வீஸ்' நிறுத்தப்பட்டது.
11, 1961 முதன்முதலாக விண்வெளியில் வாஸ்டாக் விண்கலத்தில் ரஷ்யாவின் யூரி ககாரின் பயணம் செய்தார்.
12, 2007 இந்தியாவில் அக்னி-3 - 3000 கிலோமீட்டர் தூரம் சென்று தாக்கும் ஏவுகணை சோதனை
செய்யப்பட்டது.
13, 1919 அமிர்தசரஸ் நகரில் ஜாலியன்வாலாபாக் படுகொலை டயர் என்பவரால் நடத்தப்பட்டது.
13, 1948 ஒடிசாவின் தலைநகராக புவனேஷ்வர் அறிவிக்கப்
பட்டது. முன்னர் "கட்டாக்' தலைநகராக இருந்தது.
14, 1912 டைட்டானிக் கப்பல் 1052 பயணிகளுடன்
இங்கிலாந்திலிருந்து புறப்பட்டு நள்ளிரவில்
பனிப்பாறையில் மோதி உடைந்தது.
15, 1980 ஆறு வங்கிகள் தேச உடைமையாக்கப்பட்டன.
முன்னர் 14 + 6ம் ஆக 20 வங்கிகளும், ஸ்டேட்பேங்க் -
7-ம் ஆக 27 வங்கிகள் தேச உடைமையாக உள்ளன.
17, 1915 தமிழகத்துக்கு முதன்முதலாக காந்திஜியும்
கஸ்தூரிபாவும் வந்தனர்.
17, 1952 இந்தியாவில் முதல் மக்களவை அமையப் பெற்றது.
19, 1971 ரஷ்யா சல்யூட்-1 என்ற விண்கலத்தை விண்ணுக்கு அனுப்பியது.
19, 1975 இந்தியாவில் இஸ்ரோ - ஆர்யபட்டா செயற்கைக் கோளுடன் தனது விண்வெளிப் பயணத்தைத் தொடங்கியது.
19, 2012 இந்தியா - அக்னி-5 கண்டம் விட்டுக் கண்டம் பாயும் ஏவுகணை சோதனையில் வெற்றி.
20, 1770 கேப்டன் ஜேம்ஸ் குக் - ஆஸ்திரேலியா பகுதியில்
நியூ சௌத்வேல்ஸ் பகுதியைக் கண்டுபிடித்தார்.
20, 1902 மேடம் கியூரி தம்பதியினர் ரேடியத்தைக்
கண்டுபிடித்தனர்.
20, 1960 ஏர் இண்டியா ஜெட் விமானம் முதன்முதலாக
லண்டன் சென்றது.
21, 1837 ஜெர்மனியில் ஃபிரைடிரிச் புரோபெல் என்பவரால் முதன்முதலாக பாலர் பள்ளி (கின்டர் கார்டன்) தொடங்கப்பட்டது.
21, 1995 இந்தியாவின் ஆகாஷ் ஏவுகணை, தரையிலிருந்து குறிப்பிட்ட இலக்கைத் தாக்கும் சோதனையில்
வெற்றியடைந்தது.
26, 1962 அமெரிக்காவின் - ரேஞ்சர் 4 நிலவில் இறங்கியது.
27, 1918 இந்தியாவில் முதன்முதலாக சென்னையில், திரு.வி.க.வும், வாடியாவும் "தொழிலாளர் சங்கம்' அமைப்பை நிறுவினர்.
தொகுப்பு: வி.ராமலிங்கன், சென்னிமலை.

முக்கிய தினங்கள்
1 முட்டாள்கள் தினம்.
2 சர்வதேச குழந்தைகள் புத்தக தினம்.
2 அறிவுத்திறன்
(ஆடிஸம்) குறைபாடு விழிப்புணர்வு தினம்.
5 இந்தியக் கடல்
போக்குவரத்து தினம்.
7 உலக பொது சுகாதார நாள்.
10 உலக ஹோமியோபதி தினம்.
18 பாரம்பரிய தினம்.
22 பூமி தினம்.
23 உலக புத்தக தினம்.
25 மலேரியா நோய் விழிப்புணர்வு தினம்.
28 உலகத் தொழிலாளர் நினைவு தினம்.
29 உலக நடன தினம்.

ஏப்ரல் மாதம் சுதந்திரம் கொண்டாடும் நாடுகள்

4 - ஸெனகல்
9 - ஜியார்ஜியா
15 - இஸ்ரேல்
17 - சிரியா
18 - ஜிம்பாப்வே
24 - அயர்லாந்து
28 - ஜப்பான்

No comments:

Post a Comment