Thursday 3 December 2015

நடிகர்களுக்கா ஓட்டு போட்டீர்கள்? கொள்ளையடித்த அரசியல்வாதிகளைக் கேளுங்கள்

நடிகர்களை விடுங்கள். மக்கள் பணத்தை கொள்ளையடித்த அரசியல்வாதிகள் என்ன கொடுத்தார்கள்?
----------------------------------------------------
பணம் கொடுத்து உதவாத சினிமா நடிகர்களை திட்டிக்கொண்டே நாம் இந்த கேடு கெட்ட அரசியல்வாதிகளை மறந்து விட்டோமே. கட்சி சார்பில் பணம் கொடுத்தால் மட்டும் போதுமா? கொள்ளை அடிப்பது தனித்தனியாக அடித்துக் கொண்டு கொடுக்கும்போது மட்டும் கட்சி சார்பா? தமிழ்நாட்டின் மிகப்  பெரிய கட்சித்தலைவர்கள் வெள்ள நிவாரண நிதி எவ்வளவு கொடுத்தார்கள்? எவ்வளவு கொள்ளை அடித்திருப்பார்கள்.அவர்கள் எவ்வளவு கொடுத்தாலும் தகும்.  முக்கியமாக ஆட்சியில் இருந்த /இருக்கும் அதிமுக, திமுக, காங்கிரஸ், பாஜக, மற்ற கட்சிகள். எத்தனை அமைச்சர்கள், எத்தனை MLA, எத்தனை MP, கோடிக்கணக்கில் புரளும் கவுன்சிலர்கள், மாவட்டங்கள், வட்டங்கள், எவ்வளவு அடித்திருக்கிறார்கள். இந்த வெள்ள நிவாரணத்திற்கு பணம் கொடுத்தார்களா? இதுவரை அடித்த கொள்ளை மட்டும் அல்ல இந்த சென்னை வெள்ள நிவாரண நிதியிலும் கொள்ளை அடிக்கப் போகும் இவர்கள் என்ன கொடுத்தார்கள்? நடித்து சம்பாதித்த நடிகர்களைத் திட்டுகிறோம். கொள்ளை அடித்து சம்பாதித்த அரசியல் வாதிகளை விடக்கூடாது. ஒரு கவுன்சிலருக்கே 100கோடி சொத்து இருக்கும் போது MP, MLA, அமைச்சர்கள் எல்லாம் எவ்வளவு சொத்து சேர்த்திருப்பார்கள்? 7 தலைமுறை உட்கார்ந்து தின்னும் அளவுக்கு தனித்தனியாக  சொத்து சேர்த்து விட்டு வெள்ளநிவாரணத்திற்கு கட்சி சார்பில் பணம் கொடுத்தோம் என்று சொன்னால் அடித்த பணம் யாருடையது? திமுக குடும்பம் ஆளுக்கு 1 கோடி கொடுத்தால் எத்தனை கோடி வரும்? அதிமுக ஒன்றும் அதற்கு சளைத்தவர்கள் அல்ல. காங்கிரஸ் ஊழல் பற்றி சொல்ல வார்த்தைகள் இல்லை.இப்போது  பாஜக ஆளும் கட்சி. எனவே நடிகர்களை விடுங்கள். அரசியல்வாதிகளை தனித்தனியாக கணக்கெடுங்கள். யார் மக்களின் உண்மையான பிரதிநிதிகள் சிந்திப்போம்!
இது அரசியல் பேசும் நேரம் அல்ல. அரசியல் பற்றி சிந்திக்கும் நேரம்!
சிந்திப்போம்! செயல்படுவோம்!
#சட்டமன்றத்தேர்தல்2016
#சென்னைவெள்ளம்2015
                      நண்பன் ஸ்ரீஜி 

No comments:

Post a Comment