Wednesday 11 November 2015

வீணாகக் கடலில் கலக்கும் கோதாவரியின் நீரை திருப்பி, கிருஷ்ணாவில் கலக்க வைத்து விவசாயத்துக்கு வழி வகுத்த மெகா திட்டம்

தண்ணீருக்காக தனித்தும் தவித்தும் நிற்பது தமிழகம் மட்டுமே:

ஆந்திராவுக்கு கிருஷ்ணா.

 கேரளாவுக்கு முல்லைப் பெரியாறு.

 கர்நாடகாவுக்கு காவிரி.


சமீபத்தில் ஓசைப்படாமல் ஒரு செய்தி வந்தது; கிருஷ்ணா - கோதாவரி இணைப்பு  பற்றிய செய்தி தான்  அது; உண்மையில் ஏதோ நதிகள் இணைப்பு என்று தான்  தோன்றும். ஆனால், கடலில் கலக்கும் கோதாவரியின் நீரை திருப்பி, கிருஷ்ணாவில்  கலக்க வைத்து 17 லட்சம் ஹெக்டேர் விவசாயத்துக்கு வழி வகுத்த மெகா திட்டம்  இது. முதல்வர் சந்திரபாபுவின் கனவு திட்டம் இது.  அதுவும், அவர் வெறும் 5 மாதங்களில் சாதித்தார். ஆம், ஐந்தே மாதங்களில் நிறைவேற்றி காட்டினார்; இது நிஜம்; நம்புங்கள். இன்னொரு பக்கம்  கர்நாடகா; மைசூர் பட்டிணம், மதராஸ் பட்டிணம் என்று இருந்தபோது இருந்த  விவசாய நில பரப்பை விட, பின்னாளில் காவிரி நதி வழியாக  அவர்கள் போட்ட திட்டங்களால் விவசாய சாகுபடி நில பரபரப்பு கடந்தாண்டு வரை பல மடங்கு அதிகரித்து இப்போது அதன் மொத்த விவசாய பரப்பு 60 லட்சம் ஹெக்டேர். ஆனால், தமிழகத்தில் அதே காலகட்டத்தில்  விவசாய நிலங்கள் படிப்படியாக சுருங்கி  இப்போது 33 லட்சம் ஏக்கராக உள்ளது  என்பது பரிதாபமான விஷயம் தானே.

 கேரளாவை பொறுத்தவரை கேட்கவே வேண்டாம். ஆறுகள் சங்கமம் அது. இருந்தாலும்  முல்லைப்பெரியாறு ஒன்றே போதும்.

தமிழக காய்கறிகள் கூட வேண்டாம் என்ற அளவுக்கு அவர்கள் விவசாயத்தில் தன்னிறைவு அடைய தயாராகி மும்முரமாக முயற்சி செய்து வருகின்றனர்.  ஆனால், தமிழகத்தில்...? எவ்வளவு  மோசமான நிலையில் இருக்கிறது என்றால், கர்நாடகா காவிரியில்  விடும் தண்ணீரை கூட கடைமடை பகுதி  வரை டெல்டாவில் போய்ச்சேர முடியாத  அளவுக்கு பல கால்வாய்கள் தூர்வாறாமல், அதற்காக விவசாயிகள் போராடும்  நிலையில் தான் உள்ளது. நீர் நிலைகளை மேம்படுத்த 5,763 ஏரிகளை தூர்வாரும்  திட்டத்துக்கு மத்திய அரசு 5 ஆயிரம் கோடி வரையில் நிதி உதவி செய்ய  முன்வந்தது. ஆனால், திட்ட அறிக்கையை உரிய காலத்தில் தயாரித்து தாக்கல்  செய்யாததால் நிதி உதவி கிடையாது என்று மத்திய அரசு கைவிரித்துவிட்டது.  (தமிழக அரசின் செயல்படாத நிலைக்கு சமீபத்திய பலன் இது.) கால்வாய்களை  காணோம்; ஏரிகளை காணோம்; குளங்களை தூர்த்து விட்டார்கள் ரியல் எஸ்டேட்  ஆதிக்கத்தினர். சட்டவிரோதமாக மண் அள்ளுவது, அதனால் ஆறுகள் தூர்ந்து போவது,  ஆக்ரமிப்புகள்...எல்லாம் சர்வ சகஜமாக நடக்கிறது. கேட்பதற்கு ஆளில்லை.  தடுப்பதற்கு அதிகாரிகள் இல்லை. குட்டக்குட்ட குனிந்து தற்கொலை செய்யும்  அளவுக்கு தள்ளப்பட்ட விவசாயிகள் என்பதே அவர்கள் கதி என்றாகி விட்டது.

 👌👌👌கர்நாடகா செய்வதென்ன?
இந்தியாவில் பெரிய நிலபரப்பு கொண்ட மாநிலங்களில் பட்டியலில் கர்நாடகம்  8வது இடத்தில் உள்ளது. மாநிலத்தின் மொத்த பரப்பளவு 1,90,498 சதுர கி.மீ.  கொண்டுள்ளது. இதில் 1,40,598 சதுர கி.மீ. நீர்பாசன பகுதியாக உள்ளது. அதில்  1,07 லட்சம் சதுர கி.மீட்டரில் முடிந்த வரை பாசன வசதி செய்யப்படுகிறது. இதை  1,70 லட்சம் சதுர கி.மீட்டருக்கு அதிகரிக்க மாநிலத்தில் கிடைக்கும்  தண்ணீரை பயன்படுத்தி பல்வேறு நீர்பாசன திட்டங்கள் செயல்படுத்த அரசு முடிவு  செய்தது. கடந்த 2010 முதல் 2020ம் ஆண்டு முடிய 10 ஆண்டுகள் நீர்பாசன  மேம்பாட்டு ஆண்டாக அறிவித்து செயல்படுத்தி வருகிறது. மாநிலத்தில் மொத்தம்  2,011 நீர்பாசன திட்டங்கள் செயல்படுத்த முடிவு செய்யப்பட்டது.

👀 👀 கேரளாவின் அக்கறை
கேரளாவில்  மொத்தம் 44 ஆறுகள் ஓடுகின்றன. இவற்றில் பெரியாறு, பாரதப்புழா, பம்பை,  சாலக்குடி மற்றும் நெய்யாறு உட்பட 41 ஆறுகள் மேற்கு நோக்கியும், கபினி,  பவானி மற்றும் பாம்பாறு ஆகிய ஆறுகள் கிழக்கு நோக்கியும் ஓடுகின்றன.  கேரளாவில் ஆண்டுக்கு சராசரியாக 3,055 மி.மீ. அளவுக்கு மழை பெய்கிறது.  தமிழ்நாட்டை விட இது 3 மடங்கு அதிகம்.  தற்போது கேரளாவில்  மொத்த விவசாய உற்பத்தியில் நெல் உற்பத்தி, தேங்காய் மற்றும் ரப்பருக்கு  அடுத்தபடியாக 3வது இடத்தில் தான் உள்ளது.  கடந்த சில வருடங்களாக  விவசாயத்தில் தன்னிறைவு பெற கேரள அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு  வருகிறது. கோவை உட்பட பல தமிழக மாவட்டங்களில் இருந்து பெற்று வந்த காய்கறிகளை கூட வேண்டாம் என்று சொல்லி, அதில் ரசாயன உரம்,பூச்சிக்கொல்லி மருந்து கலந்திருப்பதாக காரணம் கூறி குறைத்து வருகிறது. காரணம், தன்னிறைவில் கவனம் செலுத்த துவங்கி விட்டது; ஆனால், தமிழகமோ, விவசாயிகள் நண்பன் என்று கூறும் அரசோ கலங்கியதா? இல்லை.😤😤😤

👏👏👏👏ஆந்திராவில் மெகா சாதனை
ஆந்திராவில் கிருஷ்ணா -  கோதாவரி நதிகள் இணைப்பு திட்டத்தால் விவசாயிகளின் வாழ்வாதாரத்தை அந்த மாநில  அரசு உறுதிப்படுத்தியுள்ளது சமீபத்திய வரலாற்று நிகழ்வு.  மகாராஷ்டிர  மாநிலம் நாசிக் அருகே உற்பத்தியாகி ஆந்திரா, தெலங்கானா மாநிலங்களை வளம்  கொழிக்கச் செய்யும் கோதாவரி நதி சுமார் 1,465 கி.மீ. தூரம் ஓடி வங்கக்  கடலில் கலக்கிறது. ஒவ்வொரு ஆண்டும் 3,000 டி.எம்.சி. தண்ணீர் கடலில் கலந்து   வீணாகிறது.
கிருஷ்ணா நதியும் மகாராஷ்டிராவில் உற்பத்தியாகி கர்நாடகா,  தெலங்கானா ஆந்திரா வழியாக வங்கக் கடலில் கலக்கிறது. ஆந்திராவில் கிருஷ்ணா  டெல்டா பகுதி விவசாயத்தை மேம்படுத்தவும், வறட்சியை போக்கவும் கோதாவரி -  கிருஷ்ணா நதி இணைப்பு திட்டம் சந்திரபாபு நாயுடு முதல்வராக இருந்தபோது  கையில் எடுக்கப்பட்டு திட்டப்பணிகள் தொடர்ந்து நடந்து இப்போது அது நனவாகி  உள்ளது. இதன் பலன்; ராயலசீமா, கிருஷ்ணா டெல்டா பகுதியில் 17 லட்சம் ஏக்கர்  விளை நிலங்கள் பயனடையும்.  இரு நதிகளை இணைப்பது தேசிய நதிநீர் இணைப்புத் திட்டத்துக்கு முன்னோடியாகவும் முதலாகவும் அமைந்துள்ளது. முதல்வர் சந்திரபாபு நாயுடுவால் தீட்டப்பட்டு 1,300 கோடி ஒதுக்கப்பட்டு 5 மாதங்கள் 16 நாட்களில் இதன் பணிகள் முடிக்கப்பட்டுள்ளன.👍👍

😭😭😭தேயும் தமிழகம்
தமிழகத்தில் வேளாண் வளர்ச்சிக்காக ஆண்டுதோறும் பல ஆயிரம் கோடி ரூபாய்  திட்டங்கள் செயல்படுத்துவதாக அறிவிப்பு வருகிறது; ஆனால் ஏட்டளவில் தான் உள்ளதே தவிர, செயல்பூர்வமாக எங்கும் காணமுடியவில்லை  என்பதும் விவசாயிகளின் வேதனை குரல். இதனால், வேறு வழியில்லாமல், பெரும்பாலான உணவு  பொருட்களுக்கு நாம்  அண்டை மாநிலங்களை நம்பியிருக்க வேண்டிய கட்டாயம்  ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் கடந்த 10 ஆண்டுக்கு முன்பு 60 லட்சம்  ஹெக்டேருக்கு மேல் இருந்த விவசாய நிலப்பரப்பு தற்போது 47 லட்சம் ஹெக்டேராக  குறைந்துள்ளது. நாட்டின் மொத்த நீராதரத்தில் 3 சதவீதம் மட்டுமே  தமிழகத்தில் உள்ளது. ஆனால், மொத்த பாசன பரப்பு 33.11 லட்சம் ஹெக்டேராக  உள்ளது. நெற்களஞ்சியமான திருச்சி, தஞ்சை உள்ளிட்ட 11 மாவட்டங்களில்  காவிரியில் தண்ணீர் கிடைத்தால் மட்டுமே விவசாயம் சாத்தியம். மதுரை, தேனி  உள்ளிட்ட மாவட்டங்கள் கேரளாவின் முல்லை பெரியாறு அணையையும், கோவை,  திருப்பூர் மாவட்டங்கள் பரம்பிக்குளம் - ஆழியாறு அணைகளையும், ஈரோடு, கரூர்  மாவட்டங்கள் பவானி ஆற்று பாசனத்தையும் நம்பியிருக்க வேண்டியுள்ளது.

இது தான் தமிழகத்தின் இன்றைய நிலை; இதை மாற்ற முடியுமா? ஏன் முடியாது;  பக்கத்து மாநிலங்களில் செய்வதை காப்பி  அடித்தால் கூட நம்மால் சாதிக்க  முடியும். விவசாயத்தை காப்பாற்ற முடியும். ஆனால், காஸ் பைப் பதிக்க நிலம்  வேண்டுமா...விவசாயிகள் தலையில் கை வை...ரசாயன ஆலைகள் துவங்க வேண்டுமா?  விவசாயிகள் நிலத்தை  எடு; இப்படி எதற்கு எடுத்தாலும் விவசாயிகள் தான்  குறிவைக்கப்படுகின்றனர்; அரசும் விவசாயிகளின் மூச்சை நிறுத்துவதிலேயே குறியாக  இருக்கிறது  என்பதை விவசாயிகளின் போராட்டங்கள், வேதனை முனங்கல்களில் இருந்து தெரிந்து  கொள்ளலாம். அறிவிப்பு மேல் அறிவிப்பு வந்தாலும்,  அவை செயல்படுகிறதா   என்கிற போது வெறும் பூஜ்யம் தான் என்று கடைசியில் அம்பலம் ஆகிறது. தமிழகம்  விவசாயத்தில் செழித்த காலம் போய், பாசனத்துக்கு தண்ணீரை சேமித்த காலம்   போய், கழுதை தேய்ந்து கட்டெரும்பாகி விட்ட நிலையில் தான் விவசாயமும் ,  விவசாயிகள் நிலையும் உள்ளது என்றால் மிகையல்ல. மொத்தத்தில் தமிழகத்தில்  விவசாயிகளின் எதிர்காலம் பெரிய கேள்விக் குறியாக (?) உள்ளது.

😟😟😟எஞ்சியதை காப்பாற்றுமா அரசு?
தமிழக விவசாயிகள் சங்கத் தலைவர் நல்லசாமி: தமிழகத்தில் வேளாண் தொழில் படிப்படியாக அழிந்து வருகிறது. மிக முக்கிய பிரச்னை தண்ணீர் பற்றாக்குறைதான். கங்கை - காவிரி இணைப்பு சாத்தியமில்லை என்ற போதிலும் குறைந்தபட்சம் தமிழக நதிகளை இணைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். காவிரியில் உபரி நீர் கிடைக்கும் காலத்தில் அதை தேக்கி வைக்க திட்டங்கள் அவசியம். நீர் நிலைகளில் மணல் சுரண்டலை தடுக்க வேண்டும். இதனால்,  எஞ்சியுள்ள விவசாய நிலங்களை முழுமையாகப் பாதுகாக்க முடியும். அதையாவது அரசு செய்ய வேண்டும்.

தமிழக விவசாயம்- ஒரு பார்வை
நாட்டின் மொத்த மக்கள் தொகையில் தமிழகம் 7 வது இடத்தில் உள்ளது.
* தமிழகத்தின் மொத்த நிலப்பரப்பு - 130.33 லட்சம் ஹெக்டேர்
* நாட்டின் மொத்த பரப்பில் 4 சதவீதம்
* நிகர சாகுபடி பரப்பு 47.14 லட்சம் ஹெக்டேர் (36 சதவீதம்)
* தேசிய அளவில் தமிழகத்தின் நீர் ஆதாரம் 3 சதவீதம்
* பாசன பரப்பளவு: 33.11 லட்சம் ஹெக்டேர்
* நில உரிமையாளர்களின் மொத்த எண்ணிக்கை: 81.18 லட்சம் பேர். அவர்களது கைவசமுள்ள நிலப்பரப்பு 64.88 லட்சம் ஹெக்டேர்
* சிறு மற்றும் குறு விவசாயிகள் 92 சதவீதம். இவர்களிடம் உள்ள நிலப்பரப்பு 61 சதவீதம்.

முயற்சித்தால் ஒரு முதல்வரால் முடியாதா?
தேசிய நதிகள் இணைப்பு திட்டம் என்பது ஒவ்வொரு இந்தியரின், விவசாயிகளின் கனவு. பல ஆண்டாக இதுபற்றி பேசினாலும் ஒரு தீர்வும் வரவில்லை. ஆனால்,  சந்திரபாபு நாயுடு, ஐந்தே  மாதத்தில் முழுமூச்சாக அதே சிந்தனையாக இருந்து கோதாவரி - கிருஷ்ணா நதிகள் இணைப்பை நிறைவேற்றி சாதித்து காட்டியுள்ளார்; இதை நாடு முழுவதும் பாராட்டி உள்ளனர்.  ஒரு முதல்வர் முயற்சி செய்தால் இப்படி மாநில நதிகள் இணைப்பை கூட செய்ய முடியாதா  என்ன?  என்று விவசாயிகள் அங்கலாய்க்கின்றனர்....

இது நமது வாழ்வாதார பிரச்சனை..!!
தாமிரபரணியைக் காப்போம்!!

உண்மை என்றால் அதிகம் பகிரவும்...

No comments:

Post a Comment