Saturday 24 June 2017

MBBS admission எப்படி? CBSE விளக்கம்

'அட்மிஷன்' எப்படி: சி.பி.எஸ்.இ., விளக்கம்.
நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு, எப்படி மாணவர் சேர்க்கையை நடத்த வேண்டும்' என, சி.பி.எஸ்.இ., அறிவித்துள்ளது. சி.பி.எஸ்.இ.,யின், 'நீட்' தேர்வு பொறுப்பு இணை செயலர், சன்யம்
பரத்வாஜ் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
* 'நீட்' தேர்ச்சிக்கான தகுதி மதிப்பெண்கள், இந்திய மருத்துவ கவுன்சில் மற்றும் இந்திய பல் மருத்துவ கவுன்சில் விதிகளின்படி, நிர்ணயிக்கப்பட்டு உள்ளன. தகுதி பெற்றவர்கள், சம்பந்தப்பட்ட கவுன்சிலிங் கமிட்டியை தொடர்பு கொண்டு, மாணவர் சேர்க்கை நடவடிக்கையை துவங்க வேண்டும்
* 'நீட்' தேர்வில், முன்னேறிய வகுப்பினருக்கு, 131; முன்னேறிய மாற்று திறனாளிகளுக்கு, 118 மற்றும் மற்றவர்களுக்கு, 107 மதிப்பெண், தேர்ச்சியாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மாணவர்கள், digilocker.gov.in என்ற இணையதளத்தில், தங்களின் தரவரிசை கடிதங்களை பதிவிறக்கம் செய்யலாம்
* அரசு மருத்துவ கல்லுாரிகளில் உள்ள, 15 சதவீத மத்திய அரசு ஒதுக்கீடு இடங்களுக்கு, மத்திய அரசின் சுகாதார பணிகள் துறை, பொது இயக்குனரகம் சார்பில், கவுன்சிலிங் நடத்தப்படும். இதுகுறித்த, 'கட் - ஆப்' விபரங்களை, www.mcc.nic.in என்ற, இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம்
* அரசு மற்றும் தனியார் கல்லுாரிகளில், மாநில ஒதுக்கீட்டு இடங்களுக்கு, 'நீட்' தேர்வின் அகில இந்திய தரவரிசை பட்டியலின் அடிப்படையிலும், மாநில விதிகளின் படியும், அந்தந்த மாநிலங்களால், கவுன்சிலிங் நடத்தப்படும்
* தனியார் மருத்துவ கல்லுாரிகளுக்கு, மாநில கவுன்சிலிங் கமிட்டி சார்பில், மாணவர் சேர்க்கை நடத்தப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment