Wednesday 13 January 2016

இந்திய மாநிலங்கள்

இந்திய மாநிலங்களின் சில தகவல்கள்:
1.தமிழ்நாடு-  ஏறத்தாழ முக்கோண வடிவத்துடன் கூடிய ஒரு பெண்ணின் பாதி உருவ முகம்.
2.கேரளா- இந்தியாவின் நறுமணத்தோட்டம் என சிறப்பிக்கப்படுகிறது.
3.கர்நாடகம்-இந்தியாவிலேயே தங்கச்சுரங்கமுள்ள ஒரே பகுதி கோலார் இங்குள்ளது.
4.ஆந்திரம்-மொழி அடிப்படையில் உருவான இந்தியாவின் முதல் மாநிலம் இது.
5.தெலுங்கானா-நான்கு புறமும் நிலப்பகுதியால் சூழப்பட்ட ஒரே தென்னிந்திய மாநிலம்.
6.கோவா-அரசு அலுவலகங்களில் மின்னஞ்சல் முறையை அறிமுகப்படுத்திய முதல் இந்திய மாநிலம்.
7.மகாராஷ்டிரம்-இந்தியாவின் முதல் இரயில் ஓடிய மாநிலம்(மும்பை-தானே)
8.குஜராத்-மாநிலம் உருவானது முதல் இன்று வரை மதுவிலக்கு தொடரும் ஒரே மாநிலம்.
9.மத்தியப்பிரதேசம்-இந்தியாவில் மிக அதிகம் வைரம் வெட்டியெடுக்கப்படும் மாநிலம்.
10.ராஜஸ்தான்-பாகிஸ்தானுடன் அதிக எல்லையைப் பங்கிடும் இந்திய மாநிலம்.
11.ஜம்மு&காஷ்மீர்-தனக்கென தனி கொடியைப் பெற்றுள்ள இந்தியாவின் ஒரே மாநிலம்.
12.இமாசலப்பிரதேசம்-இந்தியாவில் பிளாஸ்டிக் பயன்பாட்டை தடை செய்த முதல் மாநிலம்.
13.பஞ்சாப்-இந்தியாவின் தானியக்களஞ்சியம்  என இது அழைக்கப்படுகிறது.
14.ஹரியானா-இந்தியாவில் வாட் அறிமுகப்படுத்திய முதல் மாநிலம்.
15.உத்தர்காண்ட்-தேவபூமி எனப்படும் இந்திய மாநிலம்.
16.உத்திரப்பிரதேசம்-மிக அதிகமாக பத்திரிக்கைகள் வெளியாகும் இந்திய மாநிலம்.
17.பீஹார்-இந்திய நதிகளில் மிக அபாயகரமான கோசி நதி இங்குள்ளது.
18.ஜார்கண்ட்-இந்தியாவின் பயண மாநிலம் என சிறப்பிக்கப்படுகிறது.
19.சட்டீஸ்கர்-இந்தியாவில் கனிமவளம் மிகுந்த மாநிலம் இது.
20.ஒடிசா-சரித்திரப்புகழ் பெற்ற கலிங்கமே இன்றைய ஒடிசா.
21.மேற்கு வங்காளம்-கல்கத்தா இந்தியாவின் அறிவியல் நகரமென சிறப்பிக்கப்படுகிறது.
22.சிக்கிம்-இந்த மாநிலத்தின் உயர்நீதி மன்றமே நம் நாட்டின் மிகச் சிறிய நீதிமன்றம்  ஆகும்.
23.அருணாச்சல பிரதேசம் -உதய சூரியனின் நாடு எனப்படும் இந்திய மாநிலம் இது.
24.அசோம்-ஆங்கில எழுத்துகளில் T என்ற எழுத்து வடிவில் அமைந்த மாநிலம் இது.
25.நாகாலாந்து-இதனுடன் எல்லையைப் பகிர்ந்துகொள்ளும் ஒரே அயல்நாடு மியான்மார்.
26.மேகாலயா-இது கிழக்கின் ஸ்காட்லாந்து என சிறப்பிக்கப்படுகிறது.
27.மணிப்பூர்-இந்தியாவின் ரத்தினம் என நேருவால் புகழப்பட்ட மாநிலம் இது.
28.திரிபுரா-மூன்று பக்கமும் வங்காள தேசத்தால் சூழப்பட்ட ஒரே இந்திய மாநிலம்.
29.மிசோரம்-மாநிலங்களில் எழுத்தறிவில் இரண்டாம் இடம் பெறும் மாநிலம். KING 👑

No comments:

Post a Comment