Wednesday 13 January 2016

சாவித்திரிபாய் புலே

1831 - ஜனவரி 3: பழமைவாதிகள், அவர் செல்லும் வழியெங்கும் வசை பாடினர்; கற்கள், சாணம் போன்றவற்றை எறிந்தனர். அத்தனை தடைகளையும் மீறி சென்று அவர், பெண்களுக்கு கல்வி கற்பித்தார்.அவர் தான், இந்தியாவின் முதல் இந்திய ஆசிரியை, சாவித்திரிபாய் புலே! மஹாராஷ்டிரா மாநிலம், கண்டாலா மாவட்டத்தில் உள்ள, நைகான்தா கிராமத்தில், சாவித்திரிபாய் பிறந்தார். தன், 9வது வயதில், மகாத்மா ஜோதிபா புலேவை மணந்தார். ஒடுக்கப்பட்டோரின் சமூக நலனுக்காகவும், இளம் விதவைகளுக்காகவும் போராடிய தன் கணவருடன், தானும் பங்கேற்றார். 1848ல் புனேயில், பெண்களுக்கான கல்வி நிலையத்தை நிறுவினார். தொடர்ந்து, பல இடங்களில் கல்வி நிலையங்களை அமைத்தார். 'பிளேக்' நோயால் பாதிக்கப்பட்டோருக்கு உதவினார்; அந்நோய் தொற்றியதால், 1897 மார்ச் 10ம் தேதி இறந்தார்.

No comments:

Post a Comment