Saturday, 17 December 2016

பணமில்லா பரிவர்த்தனை விபரம்

*▶பணம் இல்லாத பரிவர்த்தனை பற்றி தெரிந்து கொள்வோம் நண்பர்களே... !!*

வியாபாரிகளுக்கு நிறைய பேருக்கு வங்கியில் கணக்கே இல்லை. எந்த அளவுக்கு இது சாத்தியம் என்று தெரியவில்லை.

இருப்பினும் பணம் இல்லாத பரிவர்த்தனை என்னென்ன??

*(1) POS (Point of Sale) card swiping Machine*

இதை வங்கி மூலம் பெற முடியும். பரிவர்த்தனை செய்யப்படும் பணத்தில் 1.5% சேவை வரியாகவும் வசூல் செய்யப்படுகிறது.
1.5 இலட்சத்துக்கும் அதிகமாக பரிவர்த்தனை செய்வோர்க்கு மாதக் கட்டணம் இல்லை ஆனால் சேவை வரி உண்டு.
இதை வங்கி மூலம் பெறப்பட்டாலும் தனியாருக்கு சொந்தமானவை என்று கூறப்படுகிறது. ஏடிஎம் மையத்தில் பணம் நிரப்பும் ஏஜெண்டுகள் போல.

*(2) NEFT/RTGS*

இது அனைவரும் அறிந்ததே. சொற்ப்ப தொகை சேவை வரியாக வசூல் செத்தாலும், இது விடுமுறை நாட்களில் மற்றும் இரவு நேரங்களில் சாத்தியம் இல்லை.

*(3) IMPS*

சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்டது, ஆனால் நிறைய பேருக்கு தெரியாது. Online banking வைத்திருப்போர் Transactions பக்கத்தில் இதை பார்க்க முடியும். இதுவும் கிட்டத்தட்ட NEFT/RTGS போல தான். ஆனால் நொடிகளில் பணம் சென்றடையும். விடுமுறை மற்றும், இரவு நேரம் இதற்கு தடை இல்லை. எந்த நேரத்திலும் வேலை செய்யும்.

*(4) QR CODE*

சமீபத்தில் ஒரு வீடியோ WHATS APP மற்றும் FACEBOOK இல் பரவி வருகிறது இந்த QR CODE குறித்து.
சில வங்கி MOBILE APPLICATION இல் CREATE QR CODE என்று ஒரு ஆப்ஷன் இருக்கும். இதில் உங்கள் வங்கி கணக்கு எண், IFSC CODE ஆகிய விவரங்களை உள்ளீடு செய்தால் உங்களுக்கென ஒரு பிரத்யேக QR CODE வரும் (QR CODE என்பது வேறு ஒன்றும் இல்லை, பார் கோட் மாதிரியான ஒன்று) இதை print எடுத்து வைத்துக் கொள்ளளாம்.
இதே போல் மொபைல் அப்ளிகேஷன் களில் QR SCAN என்று ஒரு ஆப்ஷன் இருக்கும். அதை தொட்டால் போதும், கேமரா ஆன் ஆகும். QR CODE ஐ கேமரா வில் காண்பித்தால் போதும், உங்கள் வங்கி கணக்கு தானே அதில் வந்து விடும். கணக்கின் எண்களோ, IFSC CODE ஓ போட தேவை இல்லை. எவ்வளவு பணம் என்பதை நிரப்பி அனுப்ப வேண்டியது தான்.
(தற்போது TATA SKY DTHஐ QR CODE மூலம் ரீசார்ஜ் செய்தால் 50% கூடுதல் பணம் வந்து சேரும் - ஆனால் பிற்காலத்தில் இதன் கட்டணம் எவ்வளவு இருக்கும் என்று தெரியவில்லை )

*(5) CARD TO CARD TRANSFER*

இந்த ஆப்ஷன் ஏடிஎம் மற்றும் ஆன்லைன் பேங்கிங் ஆகிய இரண்டிலும் உண்டு. ஏடிஎம் மையத்தில் CARD TO CARD TRANSFER என்ற ஆப்ஷனை க்ளிக் செய்து, யாருடைய ஏடிஎம் கார்டுக்கு பணம் அனுப்ப வேண்டுமோ அவரது கார்டு எண்ணை இரண்டு முறை பதிய வேண்டும் (வேகமாக ) பின் எவ்வளவு பணம் என்பதை குறிப்பிட்டு அனுப்பி வைக்கலாம்.

*(6) E WALLET*

இது நிறைய பேர் உபயோகிக்கின்றனர். PAYTM, MOBIKWIK, SBI BUDDY, போன்றவைகள். இவற்றை ரீசார்ஜ் செய்யவும், ஆன்லைன் ஷாப்பிங் செய்யவும் மட்டுமே அதிகமானோர் பயன்படுத்தி வருகின்றனர். ஆனால் இதில் ஒருவர் மொபைல் எண்ணில் இருந்து இன்னொருவர் மொபைல் எண்ணிற்கு பணம் அனுப்ப முடியும். அதை வங்கிக் கணக்கில் மாற்றிக் கொள்ளளாம். ஆனால் இதற்கான கட்டணம் அதிகமாக இருப்பதால் அவசரத்திற்கு மட்டுமே பயன்படுத்த படுகிறது. இதில் 10 ரூபாய் கூட அனுப்பலாம்.

அனைவரும் இந்த முறைகளை நன்கு கற்று பணபரிமாற்றம் செய்து கொள்ளுமாறு வேண்டி கேட்டுக் கொள்கிறேன்....

No comments:

Post a Comment