Thursday, 8 December 2016

FBல் POKE என்பது

#poke என்றால் என்ன?

POKE' என்று முகநூலில் (Facebook) ஒரு ‘சொடுக்கி’ இருக்கிறது. அதன் பொருள் என்ன என்பதை முகநூலில் அநேக நண்பர்கள் புரியாமலேயே அதைச்‘ சொடுக்கி’ வருகிறார்களோ?’ என்று நினைக்கத தோன்றுகிறது.

ஏனெனில் நண்பர்கள் சிலர் அவர்களது நண்பர்களின் Facebook பக்கத்தை POKE செய்த போது அதற்குப் பதிலாக மரியாதைக்கு அவர்களும் ஒரு முறை Poke செய்தால் மறுபடியும் அவர்கள் அதையே திரும்ப Poke செய்கின்றார்கள்.

முதன் முதலில் ஒருவர் இன்னொருவர பால் POKE செய்தால் அது அவருடைய பதிவுகளைப் பார்த்து அவரைச் செல்லமாகக் கிள்ளும் நிலைக்குச் சமம்.

அவருடைய பதிவுகளுக்குத தனது பார்வை பட்டுக் கொண்டிருக்கிறது எனக் காட்டிக்கொள்வதாகவும இந்த Poke பொருள் சொல்லும்.

முதன் முதலாக உங்களை ஒருவர் Poke செய்து,பதிலுக்கு நீங்கள் Poke செய்தால் அது:அவருக்கு நீங்கள்‘ உங்கள் அன்பைப புரிந்துகொண்டேன்’ என்று பதில் உணர்த்துவதாகும்.

ஆனால் அதற்குப் பிறகு Pokeக்கு Poke என்று தொடரும்போது Pokeக்கு அர்த்தங்கள் அவரவர் போக்குக்கேற்ப மாறுபடுகின்றன.அவை எவ்வாறு எனப்புரிந்து கொள்ள, இதோ:

Poke என்றால்:சிந்தனையில் நுழைவோரை சுட்டுதல் ; செருக்கோடு எழுதுவோரை‘ தட்டுதல்’ மந்தமாயிருப்போரைக குட்டுதல்’ மனதுக்கினியோரைக்‘ கட்டுதல்’
என்று எப்படி வேண்டுமானலும் பொருள்கொள்ளலாம்.அது அவரவர் மனோநிலையைப பொறுத்த விஷயம்.

இவ்லோ நாலு இத (Poke ) நம்மய அடிக்க வராங்கனு தப்பா புரிஞ்சிகிட்டு அவங்கள திட்டிபுட்ட சாரி நண்பர்களே...

No comments:

Post a Comment