வேட்புமனு தாக்கல் செய்வதற்கு தேவையான ஆவணங்கள்
1.வேட்புமனு- போட்டியிடும் தொகுதியை சார்ந்த 10நபர்கள் முன்மொழியவேண்டும், இவர்களுடைய பெயர், முகவரி, கையொப்பம் இருக்க வேண்டும்.
2.உறுதிமொழி பத்திரம்(FORM 26)- இருபது ரூபாய் முத்திரைத்தாளில் தயார் செய்து கீழ்கண்ட தகவல்களை பூர்த்திசெய்து இருக்கவேண்டும்.
உறுதிமொழி பத்திரத்தில் பெயர், வாக்காளர் இருப்பிடம், தொலைபேசி எண், வருமானவரி எண், மற்றும் அசையும் அசையா சொத்து , நகை, படிப்பு, நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கு விவரத்தை தெரிவிக்க வேண்டும்
இதை உறுதிமொழி அதிகாரியிடம்(NOTARY PUBLIC) கையொப்பம் பெறவேண்டும்.
3.கூடுதல் உறுதிமொழி பத்திரம் தாக்கல் செய்யவேண்டும்
(இது கடந்த பத்தாண்டுகாலமாக அரசாங்க இடத்தில் குடியிருந்த தகவல் பற்றிய ஆவணம்)
4. கட்சி தலைமை வழங்கும் FORM ‘A’ & FORM ‘B’
5. கட்டுத்தொகை(DEPOSIT AMOUNT)
6. தேர்தல் அதிகாரி முன் உறுதிமொழி எடுக்கவேண்டும்
7. தேர்தலுக்காக வங்கியில் கணக்கு துவக்கி அதை தேர்தல் அதிகாரியிடம் தெரிவிக்க வேண்டும்.
8. மூன்று புகைப்படம்(PASSPORT SIZE)
9. தாழ்த்தப்பட்டாவராக இருப்பின் உரிய சாதி சான்றிதழை காட்ட வேண்டும்.
10. தொகுதி மாறி போட்டியிடுபவராக இருந்தால், வாக்காளர் அட்டை இருக்கும் தொகுதியில் தேர்தல் அதிகாரியிடம் உரிய சான்றிதழ்களை(CERTIFICATE EXTRACT) பெற்று சமர்பிக்க வேண்டும்.
No comments:
Post a Comment