Saturday, 2 April 2016

MLA ஆக சிறப்புத்தகுதிகள்

கேள்வி: சட்டமன்ற  உறுப்பினராக சிறப்புத்தகுதிகள் என்ன?

பதில்:
1. தங்களுடைய தலைவர் பேசும்போது மட்டும் மேஜை உடையும் அளவுக்கு கை வலிக்க வலிக்க தட்ட வேண்டும். தங்களுக்குப் பேச வாய்ப்பு கிடைக்கும்போது தலைவரைப் புகழ்ந்து பேசி ஜால்ரா அடிக்க வேண்டும்.

2. எதிர்க்கட்சியைச் சேர்ந்தவர்களை கிண்டல், கேலி, நக்கல், நையாண்டி செய்ய வேண்டும்.

3. தனக்கோ தன் கட்சி MLAக்களுக்கோ வெளியில் ஏதேனும் வேலையிருந்தால் உடனே அனைவரும் ஒட்டுமொத்தமாக வெளிநடப்பு செய்ய வேண்டும்.

4. மக்கள் தங்கள் பிரச்சனைகளை மறந்து ரசிக்கும் வகையில் சட்டசபைக்குள் ஒருவரையொருவர்  திட்டிப் பிரச்சனை உருவாக்கி கோஷம் போட வேண்டும்.
மைக்கைப்பிடிங்கி, வேட்டியை உருவி, நாற்காலிகளைத் தூக்கிப்போட்டு சண்டை போட வேண்டும்.

5. தொகுதி மக்கள் தன்னை சந்திக்கவரும்போது பிஸியாக இருப்பதுபோல் தன்னுடைய அல்லக்கைகள் மூலம் பில்டப் செய்து அலையவிட வேண்டும்.

6. ஆம்புலன்சிற்குகூட வழிவிடாமல் அமைச்சர்கள்,MLAக்களுக்கு மட்டும்  முக்கியமான வேலை இருப்பதுபோல் டிராபிக்கை ஏற்படுத்த  வேண்டும்.

7. தான் பங்கேற்றுதான் தொகுதியில் அனைத்து நற்பணிகளும், விழாக்களும் நடக்க வேண்டும் என்று அனைவரையும் காத்திருப்பில் வைக்க வேண்டும்.

8. அரசுவேலை, டிரான்ஸ்பர், பதவிஉயர்வு, டென்டர், கட்சிப்பதவிகள், உள்ளாட்சிபதவிகள், வெளிநாட்டுவேலை, ரியல் எஸ்டேட், நில அபகரிப்பு, கட்டப்பஞ்சாயத்து, சிபாரிசு   இன்னும் பணம்வரக்கூடிய அத்தனை வழிகளிலும் 5 வருடத்திற்குள் பணத்தை சுருட்டத் தெரிய வேண்டும்.

9. MLAக்களுக்கான சம்பளம், பென்ஷன், சலுகைகள்  ஒன்றுவிடாமல் அத்தனையையும்  தானும்,தன் குடும்பமும், உறவினர்களும், நண்பர்களும் அனுபவித்து மக்கள் வரிப்பணத்தை வீணடிக்க வேண்டும்.

10. தனக்காகவும், தன்னைச்சார்ந்தவர்களுக்காகவும் அரசுஅதிகாரிகள் அனைவரையும் தனது பதவியை பயன்படுத்தி மிரட்ட வேண்டும்.

நண்பன் ஸ்ரீஜி

No comments:

Post a Comment