Thursday 19 May 2016

கம்யூனிஸ்ட்கள் இல்லாத சட்டசபை 2016

தமிழகத்தில் கம்யூனிஸ்ட் எம்.எல்.ஏக்களே இல்லாமல் அமையும் முதல் சட்டசபை!

சென்னை: 2016 சட்டசபைத் தேர்தல் இடதுசாரிக் கட்சிகளுக்கு பெரிய சோதனையாக அமைந்துள்ளது. இதுவரை இடதுசாரிகளின் பிரதிநிதித்துவம் இல்லாத எந்த சட்டசபையும் தமிழகத்தில் அமைந்ததில்லை. ஆனால் முதல் முறையாக இடதுசாரிக் கட்சிகளின் பிரதிநிதிகளே இல்லாத சட்டசபையை தமிழகம் கண்டுள்ளது.
தமிழக சட்டசபை வரலாற்றில் இதுவரை இடதுசாரிகள் இடம் பெறாத தேர்தலே கிடையாது. அந்த அளவுக்கு நீக்கமற இருந்து வந்த இரு கம்யூனிஸ்ட் கட்சிகளும் தற்போது ஒரு இடத்தில் கூட வெல்லமுடியாத நிலைக்குத் தள்ளப்பட்டிருப்பது பலரையும் ஏமாற்றத்துக்குள்ளாக்கியுள்ளது.

தமிழக சட்டசபையில் இடதுசாரிகளின் பிரதிநிதித்துவம்:
1952 - சிபிஐ 62
1957 - சிபிஐ 4
1962- சிபிஐ 2
1967 - சிபிஎம் 11 - சிபிஐ 2
1971 - சிபிஐ 8
1977 - சிபிஎம் 12 - சிபிஐ 5
1980 - சிபிஎம் 11 - சிபிஐ 9
1984 - சிபிஎம் 5 - சிபிஐ 2
1989 - சிபிஎம் 15 - சிபிஐ 3
1991 - சிபிஎம் 1 - சிபிஐ 1
1996 - சிபிஐ 9 - சிபிஎம் 1
2001 - சிபிஎம் 6 - சிபிஐ 5
2006 - சிபிஎம் 9 - சிபிஐ 6
2011 - சிபிஎம் 10 - சிபிஐ 9

No comments:

Post a Comment