Thursday 26 May 2016

குழந்தைகளுக்கான பயனுள்ள இணையதளங்கள்

குழந்தைகளுக்கான பயனுள்ள இணையதளங்கள்

சந்தேகத்திற்குபதிலளிக்கும் தளம்

http://www.whyzz.com/

அன்றாட வாழ்க்கையில் நம் கண் முன்னே நடக்கும் சம்பவங்களை அறிவியல் பூர்வமாக விளக்கும் தளம்.உங்களுக்கு எழும் சந்தேகங்களை இத்தளத்தின் தேடல் கட்டத்தில் கேள்வியாக தட்டச்சு செய்து கொடுத்தால் அதற்கான விடைகள் தேடித்தரப்படுகிறது. இத்தளத்தைப் பயன்படுத்த நீங்கள் பதிவு செய்து கொள்ளவேண்டும். முன்பு கேட்கப்பட்ட கேள்விகளுக்கான விடைகளும் தனிப்பிரிவாக காட்டப்படுகின்றன.

அறிவியல், இயற்கை, மனித உடல், உலகம் எனப் பல்வேறு முக்கிய தலைப்புகளில் கேள்வியும் பதிலும் இடம்பெற்றுள்ளன. சில பறவைகளின் முட்டை ஏன் பழுப்பு நிறமாக உள்ளது? சில பறவைகளின் முட்டை ஏன் வெள்ளை நிறமாக உள்ளது?

ஏன் நிழல் தோன்றுகிறது?

சூரியன் மறையும்போது வானம் நிறம் மாறுவதற்கு காரணம் என்ன?என்பது போன்ற கேள்விகளும் விடைகளும் இத்தளத்தில் ஏராளமாக தொகுக்கப்பட்டுள்ளன. குழந்தைகள், பெற்றோர், ஆசிரியர் என அனைவருக்கும் இத்தளத்தில் உள்ள கேள்வி பதில்கள் பயனளிக்கக் கூடியவை.

சிறுவர்களுக்கானசமூக வலைத்தளம்

http://whyville.net/

சிறுவர், சிறுமியருக்கு விளையாட்டுக்கள் மூலம் பணத்தை நிர்வகிப்பது, சரியான முறையில் உண்பது மற்றும் ஆன்-லைன் பாதுகாப்பு போன்ற விசயங்களை கற்றுக் கொடுக்கிறது இத்தளம்.மற்றைய தளங்கள் போலவே சாட்டிங் சேவையும் பாதுகாப்பான முறையில் வழங்கப்படுவதாக இத்தளம் உறுதி ப்படுத்துகிறது. இச்சேவையை உபயோகிக்கும் முன் சிறார்கள் சாட்டிங் உரிமம் பெற வேண்டும். அதை பெறுவது அவ்வளவு சுலபமல்ல. ஆசிரியர்களும் இத்தளத்தில் இணைந்து கொண்டு குழந்தைகளுக்கு பயிற்றுவிக்கும்படியாக வசதி ஆகியவை இத்தளத்தின் சிறப்பாகும். 100 வகை விளையாட்டுக்கள் இத்தளத்தில் உள்ளன. இது தவிர சிறார்கள் தங்களுக்கென முகங்களை வடிவமைத்து உருவாக்கி கொள்ளும் அவதார் வசதி ஆகிய குழந்தைகளுக்கு பிடித்த அம்சங்கள் பல உள்ளன.

சிறுவர் தேடல் தளம்

http://www.kidrex.org/

இந்தத் தளம் குழந்தைகளுக்குப் பாதுகாப்பான இணையத் தேடலைத் தருகிறது. குழந்தைகள் காணக்கூடாத தளங்களின் பட்டியலைத் தன்னிடத்தே வைத்துக் கொண்டு, அவற்றை விலக்கி, பார்க்கக் கூடிய தளங்களில் உள்ள தகவல்களை மட்டும் தருகிறது.கூகுள், யாகூ போன்ற தளங்களை நேரடியாக குழந்தைகள் அணுகித் தேடாமல் இத்தளத்தின் மூலம் தேடினால் தேவையற்ற இணையதளப் பக்கங்களுக்கு கவனம் திசை திரும்பாமல் தேவையான இணையதளப் பக்கங்கள் மட்டுமே பிரித்துக் காட்டப்படும். குழந்தைகளுக்குப் பிடித்தமான விஷயங்கள் குறித்த தளங்களைப் பட்டியலாக்கிக் காட்டுகிறது.

பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு பாதுகாப்பான கணினி மற்றும் இணைய பயன்பாட்டை எவ்வாறு அளிப்பது என்பதற்கான பல குறிப்புகள் இத்தளத்தில் தரப்பட்டுள்ளன.

மற்ற பிற தேடல் தளங்களைப் போலவே இத்தளமும் செயல்படுகிறது. ஆனால், குழந்தைகளின் பாதுகாப்பான தேடலை மட்டுமே தன் முதல் நோக்கமாக கொண்டு முடிவுகளைத் தருகிறது. இந்த தளத்தில் சிறுவர்களுக்கான கேம்ஸ், தகவல் பக்கங்கள் மற்றும் வண்ணம் தீட்டி மகிழப் பக்கங்களும் தரப்பட்டுள்ளன. குழந்தைகள் வரைந்த ஓவியங்களும் வெளியிடப்பட்டுள்ளன.

மாணவர்களுக்கு பாடம் நடத்தும் இணையதளம்

http://www.aplusclick.com/

கும் முறைக்கு ஏற்ப இத்தளம் அமைக்கப்பட்டிருந்தாலும், நம் நாட்டு சிறுவர்களுக்கும் இதில் தரப்படும் பாடங்கள் பயனுள்ளதாக இருக்கும் என்பதால் இத்தளத்தை சிறுவர்களுக்கு பரிந்துரைக்கிறோம்.Arithmetic, Algebra, Geometry, Analysis, Logic, Applied, Exit Exam, Everyday, Olympiad, Funny, Sport Math, iPad eBooks எனும் பல்வேறு பிரிவுகளின் கீழ் பாடங்கள் இடம்பெற்றுள்ளன.தர நிலை 1 முதல் 12 வரையாக மேற்கண்ட பாடப் பிரிவுகள் பட்டியலிடப்பட்டுள் ளன. இப்பாடங்கள் கணித அறிவை யும், சிந்திக்கும் ஆற்றலையும் மேம்படுத்துவ தோடு ஆங்கில அறிவையும் வளர்க்கும்.

No comments:

Post a Comment