Saturday 21 May 2016

CBSE மாணவர்கள் இன்ஜினியரிங் கட்ஆஃப் அறியும் முறை

சிபிஎஸ்இ ரிசல்ட் வந்திருக்கிறது. எஞ்சினியரிங் கவுன்சிலிங்குக்கு கட்-ஆப் எப்படி கணக்கிடுவது என்று நிறைய நண்பர்கள் கேட்கிறார்கள். பத்தாண்டுகளுக்கு முன்பு அண்ணா பல்கலைக்கழக பொறியியல் கவுன்சிலிங்கில் சிபிஎஸ்இ மாணவர்களுக்கு 2 சதவீத இட ஒதுக்கீடு தரப்பட்டது. பிறகு அது நீதிமன்றத்தால் தடை செய்யப்பட்டது.
இப்போது அண்ணா பல்கலைக்கழக பொறியியல் கவுன்சிலிங்கைப் பொறுத்தவரை சிபிஎஸ்இ மாணவர்கள் ஸ்டேட் போர்டு மாணவர்களோடு தான் போட்டி போட வேண்டும்.

சிபிஎஸ்இ கட்-ஆப் கணக்கிடும் முறையைப் பார்ப்போம்.

கணிதத்தில் பெறும் மதிப்பெண்களை முழுமையாக எடுத்துக் கொள்ளுங்கள். வேதியியல், இயற்பியலில் பெற்ற மதிப்பெண்களில் பாதி. மூன்றையும் கூட்டினால் வருவது தான் பொறியியல் கட்-ஆப். பெரும்பாலான சிபிஎஸ்இ மாணவர்களுக்கு குறைந்த கட்-ஆப் தான் வரும்.
சிபிஎஸ்இ மாணவர்களுக்கு ஒரே ஒரு சலுகை உண்டு. அதற்குப் பெயர் normalization.
இந்திய அளவில் மேற்கண்ட மூன்று பாடங்களிலும் யாரும் 100க்கு 100 மதிப்பெண்கள் பெறவில்லை என்றால் இந்த normalization முறை கடைபிடிக்கப்படும். normalization-னுக்கு ஒரு பார்முலா உண்டு.
உதாரணத்துக்கு கணிதப்பாடத்தை எடுத்துக் கொள்ளலாம். ஒரு மாணவன் கணிதத்தில் 100க்கு 45 மதிப்பெண் எடுத்திருக்கிறார் என்று வைத்துக் கொள்வோம். இந்திய அளவில் கணிதத்தில் முதல் மதிப்பெண் 100க்கு 90 என்று வைத்துக் கொள்வோம்.
45ஐ  தொண்ணூறோடு டிவைட் செய்ய வேண்டும். .5 வரும். இதை 100ல் பெருக்க வேண்டும். ஆக, 50. இதுமாதிரி மேற்கண்ட மூன்று பாடங்களிலும் normalization செய்து, மொத்தமாகக் கூட்டி அதில் இருந்து கட்-ஆப் மதிப்பெண் கணக்கிட்டுக் கொள்ளலாம். ஆனால் 1 மாணவன் 100க்கு 100 எடுத்து விட்டாலும் normalization முறையைப் பயன்படுத்த முடியாது.

பெரும்பாலும் சிபிஎஸ்இ பாடத்திட்டத்தை எடுப்பவர்களின் இலக்கு ஐ.ஐ.டியாகத் தான் இருக்கும். அது கிடைக்காத நிலையில் மாநில கல்வி நிறுவனங்களில் இடம் கிடைப்பதில் பின்தங்கல்கள் இருப்பதைத் தவிர்க்க முடியாது.

No comments:

Post a Comment