Wednesday 4 May 2016

Power bank

பட்ஜெட் சொல்லுங்க. பவர் பேங்க் சொல்றோம் Top Ten Power Banks

பவர் பேங்க் வாங்கும்போது முதலில் கவனிக்க வேன்டியது எத்தனை mAh திறன் கொண்டது என்பதுதான். ஸ்மார்ட் ஃபோன்கள் 1500 mAh-லிருந்து, 6000 mAh வரை உள்ளது. மொபைல் பேட்டரியின் mAh அதிகமாக இருந்தால், அதிக சார்ஜ் நிற்கும் என்பது ஒரு மாயை. சார்ஜ் நெடுநேரம் நிற்பதற்கு உங்கள் ஃபோனில், லொகேஷன் செட்டிங்கை அணைத்து வைப்பது, உபயோகிக்காத ஆப்பை க்ளோஸ் செய்து வைப்பது என்று பலதையும் செய்ய வேண்டும். அதையும் மீறி அடிக்கடி உபயோகிக்க வேண்டுமென்றால் தீரும் சார்ஜுக்காக, இதோ சில டாப் செல்லிங் பவர் பேங்க்ஸ். உங்கள் ஃபோன், 2500 mAh என்றால், 10000 mAh உள்ள பவர் பேங்க் வாங்கினால், மிகச்சரியாக நான்கு முறை என்று முடியாவிட்டாலும் மூன்று முறை சார்ஜ் செய்யலாம்.

Advertisement

 
பவர் பேங்கின் முதல்வன் இந்த mi XIAOMI NDY-02-AL. 1400 ரூபாய். 16000 mAh, நின்று விளையாடும் கில்லி.
Honor Power Bank. 13000 mAh இதுவும் 1400 ரூபாய். வியர்வை, தண்ணீரிலிருந்து அரிப்பைத் தடுக்கும் இதன் மெட்டல் கேஸ் இதன் ஸ்பெஷாலிட்டி!

Honor Power Bank. 13000 mAh இதுவும் 1400 ரூபாய். வியர்வை, தண்ணீரிலிருந்து அரிப்பைத் தடுக்கும் இதன் மெட்டல் கேஸ் இதன் ஸ்பெஷாலிட்டி!

இதுவும் mi தயாரிப்பு. வெளியிட்ட நாளிலிருந்து அத்தனை ஆன்லைன் வர்த்தகத்தளங்களிலும் விற்றுத் தீர்ந்த பவர் பேங்க் இது. வெறும் 899 ரூபாயில் 10400 mAh திறன்கொண்டது இது. வோல்டேஜ் அவுட்புட் மானிட்டர் இருப்பதால், ஓவர் சார்ஜ் என்கிற பயமே தேவையில்லை.

Ambrane P-1000 Star. 10400 mAh. இதன் ஸ்பெஷல் ஃப்ளாஷ் சார்ஜிங். சீக்கிரம் உங்கள் ஃபோன் சார்ஜ் ஏறுவதற்கு, இவர்கள் உபயோகிக்கும் சாம்சங் SDI Lithium ion பேட்டரிகளே காரணம். 900 ரூபாயிலிருந்து 1200 வரை, இதன் விலை.

Hako pb200. ஒரே நேரத்தில் மூன்று கேட்ஜெட்ஸ் வரை சார்ஜ் ஏற்றலாம். 1600 ரூபாய்க்கு 20000 mAh திறனில் உள்ள இதன் இன்னொரு சிறப்பம்சம், இது Lithium Polymer Battery யைக் கொண்டது என்பதால் எடையும் குறைவு.

Advertisement

Corseca DMB2056. 2800 ரூபாய் என்றாலும் 20000 mAh என்பதால், ஏழெட்டு முறை சார்ஜ் செய்யலாம். எடை 526 கிராம் என்பதால் கொஞ்சம் வெய்ட் பார்ட்டி இது!

Hako HK 10. மற்றதை ஒப்பபிடுகையில் இது குட்டியானை. 5600 mAhதான். அதற்கேற்ப விலையும் குறைவு.

Ambrane P-5200B இதுவும் 5200 mAhதான். ஆனால் கைக்கு அடக்கமானது. விலை 550.

Ambrane P-444. இதும் வெறும் 400 ரூபாய். 4000 mAh. குறைவான விலையில் ஒருமுறை சார்ஜ் செய்து கொள்ள இது ஓகே.

Maxx 3000. வேணுமேன்னு வாங்குவதென்றால் வாங்கலாம். 400 ரூபாய்தான். 3000 mAh திறன். பாக்கெட்டுக்கு அடக்கமான, விலை குறைவான ஒன்று.

No comments:

Post a Comment