Sunday 22 May 2016

3 வருடத்திற்கு ஒருமுறை ஏன் கல்வித்தகுதியை புதுப்பிக்க வேண்டும்?

வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்த கல்வித்தகுதி 3 வருடத்திற்கு பின் புதுப்பிக்க வேண்டும் என்ற முறை இருப்பதன் காரணம் என்ன?
பதில் தெரிந்தால் தெரிவியுங்கள்.
@ படித்திருந்தும் பதிவை புதுப்பிக்காததால் வேலை கிடைக்காமல், உயர்கல்விதகுதியை புதுப்பிக்காததால் உயர்பதவிக்கு செல்ல முடியாமல் இருக்க காரணமான இந்த நடைமுறை தேவையா?
@ கல்வித்தகுதி இருந்தும் பதிவை புதுப்பிக்கவில்லை என்பது ஒரு காரணமா?
@ஒரு முறை பதிந்தால் போதும் அரசுப்பணி கிடைக்கும்வரை அதே முன்னுரிமை இருப்பதில் என்ன பிரச்சனை?
@அரசு வேலை கிடைத்தபின் அந்த பதிவை எடுத்துவிடலாமே?
@ ஓட்டுநர் உரிமம் கூட 20 வருடபயன்பாட்டில் இருக்கும்போது படிப்பிற்கு expiry date தேவையா?
@ மத்திய அரசு தேவையற்ற சட்டங்கள், நடைமுறைகளை நீக்கிவருவது போல மாநில அரசு இது போன்ற அலைச்சல் தரும் நடைமுறைகளை நீக்கினால் என்ன?

பட்டப்படிப்புக்கு மேல் படித்து பதியப்படும் ஒவ்வொரு உயர்பட்டங்களும் தனித்தனியே கவனமாக புதுப்பிக்க வேண்டியிருப்பது இன்னும் சிரமமாயிற்றே!
(D.T.ed., B.ed.,M.ed., M.phil., M.sc, ) போன்றவை தனித்தனியே புதுப்பிக்க சொல்வது பல்வேறு சிரமங்களைத் தருவதால் ஒருமுறை பதிந்தால் போதும் என்று சொல்லலாமே அரசு.

வேலைக்கான அழைப்புக்கடிதம் அனுப்பினால் விருப்பப்பட்டவர்கள் வருகிறார்கள். இறந்தவர்கள் வரப்போவதில்லை. கணினியில் பெயர் இருப்பதால் யாருக்கும் நட்டமில்லையே! அதுமட்டுமில்லாது இறந்து போகும் சிலருக்காக  உயிரோடு இருப்பவர்களை ஏன் அலையவிட வேண்டும்?

படிப்பதைவிட பதிவதும், புதுப்பிப்பதும் முக்கியமா?
வேலை தராவிட்டாலும் பரவாயில்லை அலையவிடுவதையாவது குறைக்கலாம். பதிவை புதுப்பிக்காமல் இன்னும் எத்தனை பேர் தங்களுக்கு கல்வித்தகுதி இருந்தும் வேலையை இழந்துகொண்டிருப்பார்களோ? Online ல் எளிதாக செய்யலாமே என யாரும் சொல்லவேண்டாம். ஏன் இந்த அர்த்தமற்ற நடைமுறை என்பதே கேள்வி? எனக்கு புரியவில்லை.

நண்பன் ஸ்ரீஜி

No comments:

Post a Comment