Saturday 28 May 2016

NEET 2016 நுழைவுத்தேர்வு

NEET நுழைவுத்தேர்வு....

A to Z தகவல்கள்

இந்தியாவில் உள்ள அனைத்து மருத்துவக் கல்வி நிறுவனங்களிலும் எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ்., உள்ளிட்ட இளநிலை மற்றும் முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கு, அகில இந்திய அளவிலான நுழைவுத் தேர்வு மூலமாகவே மாணவர் சேர்க்கை நடத்த வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது உச்சநீதிமன்றம்.

உச்சநீதிமன்றத் தீர்ப்புப்படி, கடந்த மே 1 அன்று நடந்த மத்தியத் தொகுப்பு மருத்துவ இடங்களுக்கான AIPMT (All India Pre-Medical / Pre-Dental Entrance Test) தேர்வு, அகில இந்திய மருத்துவ நுழைவுத்தேர்வுக்கான (NEET- National Eligibility cum Entrance Test) முதற்கட்டத் தேர்வாக மாற்றியமைக்கப்பட்டது. இதைத் தமிழகத்தில் சுமார் 26 ஆயிரம் மாணவர்கள் எழுதியுள்ளார்கள். இரண்டாம் கட்டத் தேர்வு  ஜூலை 24ம் தேதி நடத்த வேண்டும் என்று நீதிமன்றம் கூறியிருந்தது.

“NEET தேர்வு என்பது, ஒருங்கிணைந்த தேசிய அளவிலான இளநிலை மற்றும் முதுநிலை மருத்துவப் படிப்பிற்கான தகுதித் தேர்வு. இந்தத்தேர்வை ‘Central Board of Secondary Education’ (CBSE) நடத்துகிறது.

இந்தியர்கள், வெளிநாட்டில் வாழும் இந்தியக் குடியுரிமை பெற்றவர்கள் இந்தத் தேர்வை எழுதலாம். 17 வயதுக்கு குறையாமலும் 25 வயதுக்கு மேற்படாமலும் இருக்க வேண்டும். SC/ST/OBC பிரிவினருக்கு அதிகபட்ச வயதில் 5 ஆண்டு காலம் தளர்வு அனுமதிக்கப்படும். 10ம் வகுப்பு முடித்து, +2 தேர்ச்சி பெற்றவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும்.

+2ல் இயற்பியல், வேதியியல், உயிரியல் மற்றும் கணிதம் ஆகிய பாடப்பிரிவுகளைப் படித்து சராசரியாக 50% மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும்.  B.Sc (Physics/Chemistry/Biology (Botony or Zoology) Biotechnology) பட்டம் பெற்றவர்களும் இத்தேர்வை எழுதலாம். இதில் குறைந்தபட்சம் இரண்டு பாடங்களை உள்ளடக்கி அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகங்களில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

சராசரியாக 50% மதிப்பெண்களைப் பெற்றிருக்க வேண்டும். SC/ST/OBC பிரிவினருக்கு 40 சதவீத மதிப்பெண்கள் போதுமானது. NEET 2016 தேர்வானது இரண்டு கட்டங்களாக நடத்தப்படுகிறது. முதற்கட்டத் தேர்வு மே 1ம் தேதி முடிந்துவிட்டது. இரண்டாம் கட்டத் தேர்வு விரைவில் நடக்கவிருக்கிறது. முதற்கட்டத் தேர்வில் பங்கேற்றவர்களும் இரண்டாம் கட்டத் தேர்வில் பங்கேற்க விண்ணப்பிக்கலாம். ஆனால், முதற்கட்ட தேர்வின் முடிவுகள் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது. 

இந்த எழுத்துத்தேர்வு 3 மணி நேரம் நடக்கும். வழக்கமாக, ஆங்கிலம் மற்றும் இந்தி யில் மட்டுமே தேர்வு நடக்கும். தற்போது மத்திய அரசு, நுழைவுத்தேர்வை தமிழ், தெலுங்கு, மராத்தி, குஜராத்தி, அசாமி, பெங்காலி, உருது ஆகிய மொழிகளிலும் நடத்த அனுமதி அளிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளது. இதைப் பரிசீலிப்பதாக நீதிபதிகள் கூறியுள்ளார்கள்.

வினாக்கள், நான்கு விடைகளில் சரியானதைத் தேர்வு சரியான விடையைத் தேர்வு செய்யும் வகையில் (MCQ-Type) அமையும்.

கேள்விகள் கேட்கப்படும் பாடப்பகுதிகள்
   
இயற்பியல் - 45 கேள்விகள்
வேதியியல் - 45 கேள்விகள்
தாவரவியல் - 45 கேள்விகள்
விலங்கியல் - 45 கேள்விகள்

மொத்தம் 180 கேள்விகள் கேட்கப்படும். சரியான விடைக்கு +4 மதிப்பெண்களும், தவறான விடைக்கு -1 மதிப்பெண்ணும் கணக்கிடப்படும்.

இறுதி செய்யப்பட்ட பாடத்திட்டங்கள்

* Physics syllabus of class 11th
* Physical world and measurement      
* Kinematics      
* Laws of Motion      
* Work, Energy and Power      
* Motion of System of Particles and Rigid Body      
* Gravitation      
* Properties of Bulk Matter      
* Thermodynamics      
* Behaviour of Perfect Gas and Kinetic Theory      
* Oscillations and Waves    
* Physics syllabus of Class 12th
* Electrostatics      
* Current Electricity      
* Magnetic Effects of Current and Magnetism      
* Electromagnetic Induction and Alternating Currents      
* Electromagnetic Waves      
* Optics      
* Dual Nature of Matter and Radiation      
* Atoms and Nuclei      
* Electronic Devices    
* Chemistry syllabus of class 11th
* Some Basic Concepts of Chemistry      
* Structure of Atom      
* Classification of Elements and Periodicity in Properties      
* Chemical Bonding and Molecular Structure      
* States of Matter. Gases and Liquids      
* Thermodynamics      
* Equilibrium      
* Redox Reactions      
* Hydrogen      
* s-Block Element (Alkali and Alkaline earth metals)      
* Some p-Block Elements      
* Organic Chemistry- Some Basic Principles and Techniques      
* Hydrocarbons      
* Environmental Chemistry    
* Chemistry syllabus of class 12th
* Topics
* Solid Stale      
* Solutions      
* Electrochemistry      
* Chemical Kinetics      
* Surface Chemistry      
* General Principles and Processes of Isolation of Elements      
* p- Block Elements      
* d and f  Block Elements      
* Coordination Compounds      
* Haloalkanes and Haloarenes      
* Alcohols. Phenols and Ethers      
* Aldehydes, Ketones and Carboxylic  Acids      
* Organic Compounds Containing Nitrogen      
* Biomolecules      
* Polymers      
* Chemistry in Everyday Life    
* Biology syllabus of class IIth
* Diversity in Living World      
* Structural Organisation in Animals and Plants      
* Cell Structure and Function      
* Plant Physiology      
* Human physiology    
* Biology syllabus or class 12th
* Reproduction      
* Genetics and Evolution      
* Biology and Human Welfare      
* Biotechnology and Its Applications      
* Ecology and environment    

இந்தத் தேர்வின் மூலம் தேசிய அளவில் சுமார் 50 ஆயிரம் மருத்துவப் படிப்புக்கான இடங்கள் நிரப்பப்படும். இந்தத் தேர்வைக் கண்டு மாணவர்கள் பயப்படத் தேவையில்லை. +1, +2 பாடப்புத்தகங்களை முழுமையாகப் படித்தாலே போதும். 

விண்ணப்பிக்கும் முறை

www.mciindia.org என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டும். இது குறித்த கூடுதல் அறிவிப்புகள் விரைவில் செய்தித்தாள் விளம்பரங்களில் வெளியிடப்படும். தேர்வுக்கட்டணம், பொதுப்பிரிவினருக்கு ரூ.1000. SC/ST, பிற வகுப்பினருக்கு ரூ.500. இக்கட்டணத்தை ஆன்லைன் மூலமாக மட்டுமே பெறப்படும்.

விதிமுறைகள்

NEET தேர்வு எழுதும் மாணவர்களுக்குப் பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. ஷூ, தளர்வான ஆடைகள், பெரிய பட்டன்கள் இல்லாத அரை கை சட்டையை அணியக் கூடாது. பேட்ஜ்கள் அணியக்கூடாது. மோதிரம், கொலுசு, தோடு, மூக்குத்தி, செயின், நெக்லஸ், ஹேர்பின், பெல்ட், தொப்பி அணியவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் மணிபர்ஸ், ஹேண்ட் பேக் உள்ளிட்டவைகளையும் எடுத்துச் செல்லக்கூடாது.

பேனா, ஸ்கேல், கால்குலேட்டர், பிளாஸ்டிக் பவுச், தேர்வு அட்டை உள்ளிட்டவைகளை கொண்டு செல்லவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. மதம் சார்ந்த ஆடைகளை உடுத்துபவர்கள் 1 மணி நேரத்திற்கு முன்பே தேர்வுக் கூடத்திற்கு வரவேண்டும்.

இந்த எழுத்துத்தேர்வு 3 மணி நேரம் நடக்கும். வழக்கமாக ஆங்கிலம் மற்றும் இந்தியில் மட்டுமே தேர்வு நடக்கும். தற்போது மத்திய அரசு நுழைவுத்தேர்வை தமிழ், தெலுங்கு, மராத்தி, குஜராத்தி, அசாமி, பெங்காலி, உருது ஆகிய மொழிகளிலும் நடத்த அனுமதி அளிக்க வேண்டும் என்று கோரிக்கை  விடுத்துள்ளது. இதைப் பரிசீலிப்பதாக நீதிபதிகள் கூறியுள்ளார்கள்.

இந்த 2016ம் வருடம் மாநில அரசு மருத்துவக்கல்லூரிகளில் +2 மதிப்பெண் அடிப்படையில் சேர்க்கை நடத்துவதும்  அல்லது நுழைவுத்தேர்வு மூலம் நடத்துவதும் மாநில அரசின் விருப்பம்.
அடுத்த வருடம்???

No comments:

Post a Comment