Friday 13 May 2016

முகநூலும், தேர்வறையும்

நீங்கள் எந்த வகை?
முகநூலும், தேர்வறையும்.

படிச்சாலும், படிக்கலனாலும் வினாத்தாள் வாங்கின உடனே எல்லாம் மறந்து போற மாதிரி  fbக்கு   போய் ஸ்டேட்டஸ் போடறப்ப எதுவும் ஞாபகம் வரமாட்டேங்குது னு சில பேர்,

பரீட்சைல பேப்பர் மாத்தி எழுதுற மாதிரி அடுத்தவங்க ஸ்டேட்டஸ் லாம் share பண்றது சிலபேர்,

நம்மள மாதிரி முழிக்கிறவங்க யார்னு பாத்து அவங்களுடோ மெதுவா பேசற மாதிரி comments அடிக்க சிலபேர்,

ஹால் ல அழகான பொண்ணுங்க இருந்தா அத பார்த்து ரசிக்கிற மாதிரி அடுத்தவங்க ஸ்டேட்டஸுக்கு like போட சில பேர்,

நல்லா எழுதுறவன வெறிக்க பார்க்கற மாதிரி எல்லா ஸ்டேட்டஸையும் படிக்காம  பார்க்கறத மட்டும் செய்யற சில பேர்,

அழகான மேடம் சூப்பர்வைசரா வந்தா அவங்களை மட்டும் பார்க்கற மாதிரி போட்டோவ மட்டும் பார்க்கற சிலபேர்,

ஏன் வந்தோன் னு பாதில எந்திரிச்சு போற மாதிரி log out பண்ற சில பேர்
(இதில் நீங்கள் எந்த வகை?)
தேர்வறையிலும், முகநூலிலும்.

நண்பன் ஸ்ரீஜி

No comments:

Post a Comment